நடிகர் மாரிமுத்து எவ்ளோ பிரில்லியண்ட்! பாஞ்சாலங்குறிச்சி ஓலை பாய் காமெடியில் செய்த சூப்பர் டெக்னிக்
சென்னை: பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் சுருட்டிக் கொள்ளும் ஓலை பாய் எங்கும் கிடைக்காததால் நடிகர் மாரிமுத்து ஒரு டெக்னிக்கை செய்ததாக தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மாரிமுத்து இறப்புக்கு பிறகு அவருடைய பேட்டிகள் தற்போது அவ்வப்போது வைரலாகி வருகின்றன. மாரிமுத்து திரைப்பட நடிகர், சீரியல் நடிகர், குணச்சித்திர நடிகர் மட்டுமில்லை அவர் ஒரு இயக்குநரும் கூட!

பிரபல இயக்குநர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது படங்களான அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்தார். அதன் பிறகு வசந்த், சீமான், மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
இவர் இயக்கிய படம் கண்ணும் கண்ணும் என்ற படமாகும். இதைத் தொடர்ந்து அவர் 2014 ஆம் ஆண்டு புலிவால் என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், மருது, பைரவா, கடைக்குட்டி சிங்கம், பரியோறும் பெருமாள் உள்ளிட்டோரின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.
தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் பெண்களை கொத்தடிமைத்தனமாக நடத்தும் ரோலில் நடித்து அனைவர் மனதிலும் குடி போய்விட்டார். இந்த சீரியலில் அவருடைய ரோலுக்காகவே நிறைய பேர் அந்த சீரியலை பார்க்கத் தொடங்கினர்.
என்னதான் குணசேகரனை பலர் திட்டினாலும் அவர் கோபத்தில் செய்யும் சில காமெடிகளுக்கு ரசிகர் பட்டாளமே உண்டு. இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த மாரிமுத்துவின் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஒரு நாள் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இந்த நிலையில் அவருடைய பழைய பேட்டிகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் அவர் டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில் பாஞ்சாலங்குறிச்சியில் வரும் காமெடி சீன் குறித்து மாரிமுத்து விவரித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் மாரிமுத்து அளித்த பேட்டியில்,
பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் நடிகர் வடிவேலு குடித்துவிட்டு தள்ளாட்டத்துடன், ஒரு ஓலை பாயில் படுக்க முயற்சி செய்து மல்லுக் கட்டுவார். ஆனால் ஓலை பாய் இருபுறமும் சுருட்டிக் கொள்ளும். உண்மையை சொல்ல போனால் இது போன்ற பாய் எங்கும் கிடைக்கவில்லை.
ஷாட் எடுத்தாக வேண்டும். என்ன செய்வது என யோசித்தேன். உடனே எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. உடனே கருப்பட்டியை வாங்கி வர சொன்னேன். அதை காய்ச்சி, சாதாரண ஓலை பாயில் ஊற்றினேன். பிறகு அதை மொட மொடவென வெயிலில் காய வைத்தேன். அது முதல் அந்த பாய் எந்த பக்கம் விரித்தாலும் சுருட்டிக் கொண்டது.
அது போல் ஒரு படத்தில் கருவாடு கிடைக்கவில்லை. நாங்கள் ஷூட்டிங் எடுத்த இடத்தில் இந்த பொருள் உடனே கிடைப்பது அரிது. இதையெல்லாம் நாங்கள் முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. இதனால் நான் யோசித்தேன். ஷூட்டிங்கில் எப்போதும் வில்லன்கள் பிடிப்பதற்கு சுருட்டு இருக்கும். உடனே அதை கருவாடு ஷேப்பில் கட் செய்து வைத்து விட்டேன். பார்ப்பதற்கு நிஜ கருவாடு போலவே இருந்தது. இது போல் சின்ன சின்ன ஐடியாக்களை எல்லாம் நான்தான் ஷூட்டிங்கில் செய்வேன் என மாரிமுத்து கூறியிருந்தார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications