வேதனையுடன் பேசிய மயில்சாமி மகன்! "ஊருக்கே உதவியவர் மகன் நான்.. எனக்கு யாரும் உதவல"
சென்னை: தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற காமெடியனாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றி மறைந்தவர் மயில்சாமி. நடிகர் என்பதையும் தாண்டி பலருக்கும் உதவிய நல்ல மனிதர் என்ற பெயரை பெற்றவர். ஆனால், அவரது மகனுக்கு திரைத் துறையில் இருந்து, ஏன் மயில்சாமியின் நண்பர்கள் கூட உதவவில்லை என வேதனையுடன் பகிர்ந்துள்ளார். பல கம்பெனிகளுக்கு தானே பட வாய்ப்பு கேட்டு சென்ற நிலையில், தன்னை யாருமே கண்டுகொள்ளைவில்லை என வேதனை பொங்க பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கால் பதித்து காமெடி குணச்சித்திர நடிகர் என பெயர் பெற்றவர் மயில்சாமி. அது மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் வாய்ஸ் கொடுப்பது அவருக்கு கைவந்த கலை.
அதுமட்டுமல்லாமல் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் குரல்களில் பேசி புகழ் பெற்றவர். சினிமா மட்டுமல்லாது சின்னத்திரை, நாடக மேடை, வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள் என மிகவும் பிசியாக இருந்தவர். ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்ற பெயரை பெற்றவர் மயில்சாமி.

அவரிடம் உதவி என்று கேட்டு வந்தால் தன்னிடம் இருக்கிறதோ, இல்லையோ, அடுத்தவர் இடமாவது வாங்கி உதவி செய்வது மயில்சாமியின் வழக்கம். சுனாமியின் போது நடிகர் விவேக் ஓபராய் கிராம மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகிறார் என அறிந்தவுடன் நேராகச் சென்று தனது தங்க சங்கிலியை கழுத்தில் அணிவித்து விட்டு வந்தவர் மயில்சாமி என விவேக் குறிப்பிட்டிருக்கிறார். தீவிர சிவ பக்தரான அவர் திருவண்ணாமலையில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
எம்ஜிஆரின் தீவிர ரசிகர் நான் எம்ஜிஆர் போலவே நானும் உதவ வேண்டும் என பல மேடைகளில் பேசியிருக்கிறார். மயில்சாமி சொன்னது போலவே பலருக்கும் உதவி செய்துவிட்டு இறைவனடி சேர்ந்தார்.
எல்லோருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மயில்சாமி நடித்திருந்தாலும் அவரது மகன்கள் திரைத்துறைக்கு வர போராடி வருகின்றனர். மூத்த மகன் அன்பு, இளைய மகன் யுவன் தற்போது திரைத்துறையில் சில படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் யுவன் நடித்து வருகிறார். அன்புவோ வெள்ளி திரையில் தான் நடிக்க வேண்டும் என உறுதியாக வாய்ப்பு தேடி வருகிறார். இந்த நிலையில் தனது தந்தை எவ்வளவோ பேருக்கு உதவி செய்திருக்கிறார். ஆனால் தங்களுக்கு யாருமே உதவவில்லை என வேதனையுடன் பகிர்ந்து இருக்கிறார் அன்பு.
எமன் கட்டளை என்ற படத்தில் அன்பு நடித்திருக்கும் நிலையில் அந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர்," எனது அப்பா எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறார். பல நேரத்தில் அவரிடம் பணம் இல்லை என்றாலும் வசதி இல்லை என்றாலும் பிறரிடம் கடன் வாங்கி உதவி செய்துவிட்டு சம்பளம் வரும்போது அந்த கடனை அடைத்து விட்டு தன்னிடம் பணம் இல்லாமலேயே இருந்திருக்கிறார். ஆனால் எனது அப்பா மறைந்த பிறகு எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை.
திரைத்துறையில் அப்பாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களும், ஏன் அவர்களது நண்பர்களும் கூட எங்களுக்கு உதவ முன் வரவில்லை. அப்பாவின் மறைவுக்கு பிறகு குடும்பத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை வந்தது. சினிமாவில் எப்படியாவது நிலைக்க வேண்டும் என பல கம்பெனிகளில் வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது கூட யாருமே எனக்கு உதவவில்லை. ஏன் என் அப்பா உதவி செய்தவர்கள் கூட என்னை ஒதுக்கீடு தான் வேதனையாக இருக்கிறது. நானே முயற்சி செய்து தற்போது சில படங்களில் நடித்து வருகிறேன்" எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் பலருக்கு உதவி செய்த மயில்சாமி மகனுக்கு திரைத்துறையினர் உரிய வாய்ப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications