“கஷ்டத்த யாருகிட்டயும் சொல்லாம மகிழ்ச்சியா இருந்த மாதிரியே காட்டிட்டான்” மனோஜ் பற்றி நாசர் உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மனோஜுக்கு பல ஆசைகள், கனவுகள் இருந்தது. மனோஜ் எல்லோருக்கும் நல்லவனாக, தனது கஷ்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் இருந்தது போலவே காட்டிக் கொண்டிருந்துள்ளான்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகர் நாசர்.

இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகனும், நடிகரு​மான மனோஜ் பார​தி​ராஜா மாரடைப்பு காரண​மாக நேற்று (மார்ச் 25) உயி​ரிழந்​தார். அவருக்கு வயது 48. . இதய பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த அவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Actor Nassar Mourns Manoj Bharathiraja He Hid His Troubles Behind a Smile

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக மனோஜின் உடல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். நடிகர் மனோஜின் உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, சரத்குமார், விதார்த், நாசர், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் நாசர் உருக்கமாகப் பேசியுள்ளார். "மனோஜை எனக்கு 6 வயது குழந்தையாக இருந்தபோது இருந்தே தெரியும். நான் வேலை செய்த ஹோட்டலில் நீச்சல் பயிற்சிக்காக வருவார்.

மனோஜுக்கு பல ஆசைகள், கனவுகள் இருந்தது. மனோஜ் எல்லோருக்கும் நல்லவனாக, தனது கஷ்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் இருந்தது போலவே காட்டிக்கொண்டு மன அழுத்தத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு இருந்துள்ளான். இந்த இழப்பு பாரதிராஜா முன் பெரிய பூதம் மாதிரி நிற்கிறது. இந்த இழப்பு அவருக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும். அவரது குடும்பத்தார், அவரது குழந்தைகள் தைரியமாக இருக்க வேண்டும்" என நாசர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+