ஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு!
Recommended Video
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் பொன் வண்ணன் தான் கைப்பட வரைந்த ஓவியத்தை வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற லோக் சபா தேர்தல் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கிறது.
ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. பாஜகவின் தீவிர எதிர்ப்பாளரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

கடும் போட்டி
திருமாவளவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திர சேகருக்கு கடும் போட்டி கொடுத்தார். ஒவ்வொரு சுற்று முடிவிலும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர்.

நள்ளிரவை தாண்டி
இதனால் வெற்றி யார்க்கு என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவை தாண்டி நீடித்தது. இதனால் சிதம்பரம் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமா வெற்றி
பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர் 24ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது வெற்றியை விசிக தொண்டர்கள் கொண்டாடினர்.

வாழ்த்து
திருமாவளவனின் வெற்றி உண்மையான வெற்றி என்றும் பணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றது என்றும் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற திருமாவளவனுக்கு அனைத்துக்கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருமாவுக்கு பரிசு
இந்நிலையில் சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலத்தில் நடிகர் பொன்வண்ணன் திருமாவளவனை சந்தித்தார். அப்போது, பொன்வண்ணன் தான் கைப்பட வரைந்த திருமாவளவனின் ஓவியத்தை பரிசாக வழங்கினார்.
|
அச்சு அசலாக
அச்சு அசலாக அப்படியே திருமாவளவனை வரைந்துள்ளார் நடிகர் பொன்வண்ணன். அதில் உன் வெற்றி முக்கியமானது என்றும் பொன்வண்ணன் குறிப்பிட்டுள்ளார். இதனை திருமாவளவன் மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications