Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் எனக்கு உரிமையுள்ள வீடு”: ஜப்தி ஆர்டருக்கு எதிராக கோர்ட் படியேறிய பிரபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனது சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி சிக்கலில் தனக்கு உரிமையுள்ள வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக நடிகர் பிரபு தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

Actor Prabhu Moves Madras High Court to Stay Order on Sivaji Ganesan s House Confiscation

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரராக உள்ள 'ஈசன் ப்ரொடக்ஷன்' என்ற நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட தயாரிப்பு பணிக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த கடன் ஒப்பந்தத்தின்போது ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பத் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராத நிலையில், இந்த விவகாரத்தை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார். கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உரிமைகளை பெற்றுக் கொண்டு கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் மீதி தொகையை ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திடமே வழங்க வேண்டும் எனவும் மத்தியஸ்தர் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவின் படி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் கேட்ட பொழுது படம் இன்னும் முடிவடையவில்லை என ஈசன் ப்ரொடக்சன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு அவகாசம் கேட்டபோதும் கூட இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில், 'எனது தந்தை சிவாஜி கணேசனின் உந்த வீட்டில், எனக்கு எந்த பங்கும் இல்லை. என் சகோதரர் நடிகர் பிரபு பெயரில் உள்ளது. எனவே, ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, 'உரிமையாளராக இல்லாவிட்டால், எப்படி ஜப்தி செய்ய முடியும்?' என்று கூறி, ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது சகோதரர் ராம்குமார் மகன் துஷ்யந்த் தொடர்புடைய நிதி சிக்கலில் தனக்கு உரிமையுள்ள வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக நடிகர் பிரபு தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+