தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறார்கள்? உளறித் தள்ளிய பவன் கல்யாண்.. பிரகாஷ் ராஜ் பதிலடி!
சென்னை: இந்தி வேண்டாம், ஆனால் பாலிவுட்டில் இருந்து வரும் பணம் மட்டும் வேண்டும் என்று தமிழக அரசியல்வாதிகளை விமர்சித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியை திணிக்காதீர்கள் என்று கூறுவதால் பிற மொழியை நாங்கள் வெறுக்கிறோம் என்பதல்ல என்றும் பிரகாஷ் ராஜ் பதில் அளித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட நாள் தொடங்கி இதுவரை இந்தி திணிப்பு தொடர்பாக விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு பாஜக மற்றும் அமமுக கட்சிகள் மட்டுமே ஆதரவாக இருந்து வருகின்றன.

ஏனைய கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் மும்மொழி கொள்கையை எதிர்க்கின்றன. தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தேசிய அளவில் தொடர் விவாதமாக மாறி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தாய் மொழி குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாக சாடி இருக்கிறார்.
ஜன சேனா கட்சியின் 12வது ஆண்டு விழாவில் பவன் கல்யாண் பேசுகையில், நாட்டில் 2 மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உட்பட பல மொழிகள் தேவை. மொழியில் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மட்டுமல்லாமல், மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும். இந்தியாவில் பல மொழிகள் இருப்பது நல்லது.
சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கின்றனர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள். பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் மட்டும் தேவை.
ஆனால் அவர்களுக்கு இந்தி தேவையில்லையா? இது என்ன லாஜிக் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பவன் கல்யாணின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் விவாதமாகியுள்ளது. ஏற்கனவே சனாதன தர்மம் தொடர்பான பவன் கல்யாணின் பேச்சிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் கன்னடத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், உங்களின் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று சொல்வது, வேறு மொழியை வெறுக்கிறோம் என்று அர்த்தமில்லை. தாய் மொழியை தாயைப் போல் சுயமரியாதையோடு காப்பதற்காகதான். இதனை பவன் கல்யாணிடம் யாராவது கூறுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் பவன் கல்யாணின் கருத்துக்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியில் டப் செய்து வெளியிடும் படங்களை மக்கள் பார்க்காமல் இருப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும், ஆனால் இந்தியை படிக்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்படுகிறது என்றும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications