Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ..ஓ..ஓ.. ஓவரா போன "நடிகர் ராதாரவி".. டபுள் மீனிங் + ஆபாசம்.. முகம் சுழித்த பெண்கள்.. எரிச்சலில் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்களும், சோசலிச அபிமானமும், பெரியாரின் துருவேறாத போர்வாள் என்று கருதப்பட்ட நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகனா? இப்படி பேசியது என்று அதிர்ந்து போயிருக்கின்றன திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள்.. ஆம்.. சமீபத்திய ராதாரவியின் பேச்சுதான் இணையத்தில் மீண்டும் வைரலாகி, பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.

கடந்த 17ம் தேதி வடசென்னை மூலக்கடையில் பாஜக கூட்டம் ஒன்று நடந்தது.. பாஜக அரசு பொறுப்பேற்று 9 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இந்த பொதுக்கூட்டம் நடந்தது.

 Actor Radharavi critized dmk government and slams dmk minister, senior leaders

திமுக: கட்சியின் முக்கிய சீனியர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். அப்போது நடிகர் ராதாரவி பேசியிருந்தது இணையத்தில் வைரலாகியிருந்தது.. அதன் சுருக்கம்தான் இது:
"ஊழல் செய்வதாகட்டும், ஆளுங்களை க்ளோஸ் செய்வதாகட்டும், திமுகவுக்கு அத்துப்படி. ஆனால் தம்பி ஸ்டாலினை மட்டும் தப்பு சொல்லாதீங்க.. அவருக்கு ஒன்னுமே தெரியாது. அவர்கிட்ட கத்தியை கையில் தந்து, இப்படிதான் 'சதக் சதக் சதக்'-ன்னு குத்தணும் சொல்லி தரணும். அதுக்குப்பிறகுதான், ஓ அப்படியா-ன்னு கேட்டுட்டு அதன்படியே செய்வார்.. ஏன்னா, அதுவே அவருக்கு தெரியாது.. நல்ல புள்ள அவர்.. கலைஞர் அவரை லொடக்குன்னு விட்டுட்டு போயிட்டாரு. அவர் மட்டும் தன்கூடவே வெச்சிருந்து டிரெயினிங் தந்திருந்தால், பிரமாதமா இருந்திருக்கும்.

அரசியல்: சகோதரர் ஸ்டாலின் மீது ஊழல் சொல்லவே முடியாது. ஏன் என்றால், அவர் பல லட்சம் கோடிக்கு அதிபதி.. இதைத்தான் முதல்ல இருந்து நான் சொல்லிட்டு இருக்கேன். அவர் ஏன் திருடணும்? ஸ்டாலினுக்கு அரசியல் தெரியலேன்னு சொன்னால் ஒத்துக்கொள்வேன். ஆனால், பணம் திருடினார் என்று சொன்னால், நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். இதோ இங்கே சகோதரர் அண்ணாமலையை வெச்சிக்கிட்டே இதை சொல்றேன்... ஸ்டாலின் அவர்கள் ஊழல் செய்தார் என்று நீங்கள் சொல்லக்கூடாது.

ஊழல் பணம்: ஏன்னா, இனி ஊழல் செய்து, அந்த பணத்தை வைப்பதற்கு அங்கே இடமில்லை.. எங்கேதான் வைப்பாங்க.. பணம் வைக்க இடமே இல்லை. வெளிநாட்டில் எங்கே கொண்டுபோய் வைப்பது என்று, மேப் வெச்சிக்கிட்டு இடத்தை தேடுறாங்க.. எல்லா நாட்டிலயும் ஊழல் செய்த பணத்தை கொண்டுபோய் வெச்சாச்சு.. இப்போ சந்திரமண்டலத்துல கொண்டுபோய் பணத்தை வெக்கலாமா?ன்னு பார்க்கிறாங்க.. அங்கேயும் கொண்டுபோய் இவங்க வைப்பாங்க.. அப்படி வைத்தாலும், நம்ம மக்கள் ஆ-ன்னு சிரிச்சிட்டு அதையும் பார்ப்பாங்க" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், இதே பொதுக்கூட்டத்தில் ராதாரவி பேசியிருந்தது, இன்னொரு வீடியோவாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது. இந்த கூட்டம் நடந்து முடிந்து 4 நாட்கள் ஆகியும், பேச்சின் ஆபாச நெடி இன்னும் அடங்கவில்லை.

அதாவது, ராதாரவி மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, கீழே இருந்த தொண்டர்கள் ஏதோ கமெண்ட் அடித்துள்ளனர்.. அதற்கு அவர்களைப் பார்த்து, "ஓ..ஓ***" என்று கெட்ட வார்த்தையால் திட்டி, "போய் உட்காருங்கள்"... என்று சொல்லியிருக்கிறார்..

சத்தம் போட்டார்: பிறகு, அங்கிருந்த பாஜக தொண்டர்களில் ஒருவர், செல்போனில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.. உடனே தன்னுடைய பேச்சை நிறுத்திய ராதாரவி, "யோவ்.. நீ செல்போனில் பேசுவது எனக்கு இங்கே கேக்குது.. நான் பேசுறதை நீ கேட்கிறாயா? இல்ல நீ பேசுறதை நான் கேக்கணுமா? என்று சத்தம் போட்டுள்ளார்.

"பாஜக மீட்டிங்கில் பக்தியுடன் பேசுவார்கள் என்று நினைச்சு நீங்க எல்லாரும் வந்திருப்பீங்க.. அப்படியெல்லாம் பேசினால் வேலைக்காகாது.. பேச்சுக்கு பேச்சு இரண்டு "ஓ***" போட்டாதான் நீங்கள் பேச்சை ரசித்து கேட்பீங்க.. என்றார்..

ஓட்டுக்கு பணம்: பிறகு, ஒரு தொண்டர் எழுந்து "பாரத் மாத்தா கி ஜே" என்று கத்தினார். அப்போது ராதாரவி, "இவன் எல்லாம் நமக்கு எங்கே ஓட்டு போடப் போகிறான், யோவ் உட்காருய்யா.. இதுக்குதான் நான் பொதுக்கூட்டங்களில் பேசுறதுக்கே வர்றதில்லை.. வரேன்னு சொல்லி பணம் கேட்டால் போதும், மீட்டிங் இப்போ இல்லை, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்ன்னு சொல்லிடறாங்க. பணம் கொடுத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதனால இந்த முறை பணம் கொடுக்கச் சொல்லுங்கள்.

நாம் நினைத்தால் வெற்றி பெறலாம் என்பதெல்லாம் முடியாது.. மேலே உள்ளவனும் நினைக்க வேண்டும். அதனால் மேலே சொல்லி பணம் வாங்குங்கள்" என்று மேடையில் உட்கார்ந்திருந்த பாஜக துணைத்தலைவர் நாராயண திருப்பதியிடம் சொன்னார் ராதாரவி.

"எனக்கு தப்பாவெல்லாம் பேச வராது. தப்பாக பேசவும் தெரியாது.. உள்ளதை பேசுவேன்.. ஒன்றிரண்டு ஏதாவது வார்த்தை ஏடாகூடமா வந்து விழுந்துவிடும், ஆனால், உண்மையைதான் பேசுவேன்" என்று தன் பேச்சின்போது கூறியிருந்தார் ராதாரவி.

கோரிக்கை: இதே கூட்டத்தில், நிறைய டபுள் மீனிங்கிலும், இழிவாகவும் பேசியிருந்த இந்த வீடியோ இணையத்தில் ரவுண்ட அடித்து கொண்டிருக்கிறது.. தொடர்ந்து பெண்களை இழிவாக பேசி வரும் ராதாரவியை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்களும் வலியுறுத்த துவங்கி உள்ளனர்.

இந்த விழாவில் செந்தில் பாலாஜி பற்றியும் ராதாரவி கிண்டலடித்து பேசியிருந்தார்.. "செந்தில் பாலாஜின்னு ஒரு மனுஷன் பாவம் மாட்டிக்கிட்டு தவிக்கிறாரு. என் நல்ல நண்பன் அவர்.. வருத்தமா இருக்கு.. அவர் நடிக்கிறாருன்னு சொல்றாங்க.. அப்பறம் பைபாஸ் ஆபரேஷன்னு சொல்றாங்க. அந்த கட்சியில் போய் சேர்ந்ததுக்கு, பைபாஸ் ஆபரேஷன்.

10 ரூபாய் குறைக்கலியே: உன்னை போலீஸ் பிடிச்சாங்களே, அப்பவாவது ஒயின்ஷாப்பில் 10 ரூபாய் குறைச்சாங்களா? குறைக்கவேயில்லை.. அது அப்படியே தொடரும்.. அதுக்கு இன்னொரு அமைச்சரை பிடிக்கணும்.. கப்பம் தொடரணும். செந்தில் பாலாஜியை 3 மாசத்துக்கு முன்னாடியே அமலாக்கத்துறை பிடிச்சிருந்தால், கரண்ட் விலை ஏறியிருக்காது.. 3 மாசத்துக்கு முன்னாடியே பிடிச்சிருந்தால், நமக்கு எல்லாம் லாபம் வந்திருக்கும்..

காவேரி மருத்துவமனையில் இப்போ இருக்காரு.. அந்த ஆஸ்பத்திரி, அமைச்சர் நேரு அண்ணனுடைய ஆஸ்பத்திரின்னு சொல்றாங்க.. எனக்கு தெரியாது, பேப்பரில் படிச்சேன்.. செந்தில் பாலாஜி காவேரி ஆஸ்பத்திரியில் இருந்தால் என்ன? அவர் முதல்ல "வெளியே வர்றாரா"ன்னு பாருங்க. அதாவது, வெளியே வந்து எட்டிப்பார்க்குறாரா பாருங்கன்னு சொல்றேன்" என்று விமர்சித்திருந்தார் ராதாரவி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+