சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கலைஞர்".. ஸ்டாலின் நல்ல மனுஷன், விட்ருங்க.. ஆனா கூட ஒன்னு இருக்கே.. ரூ.5 லட்சம் கோடி..பகீர் ராதாரவி

நடிகர் ராதாரவி திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்து பேசினார்

Google Oneindia Tamil News

சென்னை: சகோதரர் ஸ்டாலின் பேசுவதை விட்டுவிடுங்கள்.. ஏன்னா, அவர் ஊழல் பண்ண மாட்டார்.. ஏன்னா, 5 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர்.. அவர் போய் ஊழல் செய்வாரா? என்று பாஜக மாநில தலைவரிடம் அண்ணாமலையிடம், நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இந்தியாவில் ரெண்டே ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க! மோடி, அமித்ஷா பேரை சொன்ன ராதாரவி

    அறிவாலயத்தில்.. ஸ்டாலின் காதில் கிசுகிசுத்த வைகோ.. டக்கென முகம் மாறிய முதல்வர்.. இதுதான் விஷயமேஅறிவாலயத்தில்.. ஸ்டாலின் காதில் கிசுகிசுத்த வைகோ.. டக்கென முகம் மாறிய முதல்வர்.. இதுதான் விஷயமே

    சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.. இதில், பாஜக தலைவர்கள் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.. நடிகர் விக்னேஷ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அவர் அப்போது பேசியதாவது:

    சிங்கம்

    சிங்கம்

    தமிழக பாஜகவின் சிங்கம் அண்ணாமலை.. அவர் வருங்கால முதல்வர்தான்.. ஆனால், இதை பாஜகவில் நாம் சொல்லவே கூடாது. அவர்தன் முதல்வர் என்பது நமக்கு தெரியும். அதனால், மனசுலேயே வெச்சுக்கணும்... (ராதாரவி இப்படி சொன்னதுமே, பாரத் மாதா கி ஜே என்று அங்கிருந்த சில தொண்டர்கள் கோஷம் போட்டனர்.. உடனே டக்கென திரும்பி ஒரு பார்வை பார்த்தார் ராதாரவி.. உடனே கோஷத்தை நிறுத்திவிட்டனர்..

     ராதாரவி

    ராதாரவி

    தொடர்ந்து பேசிய ராதாரவி, "நம்மாளுங்க கிட்ட இருக்கிற ஒரு பழக்கம் என்னன்னா, திடீர் திடீர்னு பாரத் மாதா கி ஜே-ன்னு சொல்லுவாங்க.. அதை 3 முறை சொல்லணும்.. உடனே நாம பேச வர்றது மறந்து போயிடுது என்று சிரித்து கொண்டே தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்.. எனக்கு அண்ணாமலையிடம் பிடித்த விஷயம் ஒன்று இருக்கிறது.. என்னை போலவே, அவரும் அனைவரையும் பெயர் சொல்லிதான் அழைப்பார்.. யாராக இருந்தாலும் பெயர் சொல்லி அவர்களை குறிப்பிட்டு பேசுவதுதான் வழக்கம்..

     கலைஞர் பண்பு

    கலைஞர் பண்பு

    இதை நான் கலைஞரிடமிருந்து கற்றுக் கொண்ட பழக்கம்.. இவ்வளவு பெரிய பாஜக இயக்கத்தில், அனைவரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு பேசுவது நல்ல பண்பாகும்.. தன் பேச்சாலேயே பத்திரிகையாளர்களை திருப்பின ஒரே நபர் அண்ணாமலை மட்டுமே.. இந்த பத்திரிகையாளர்கள் ரொம்ப நல்லவங்கதான்.. இந்த செய்தியை போடாதீங்கன்னு சொன்னால், அவங்களும் அதை அப்படியே பின்பற்றி வந்தார்கள்.. ஆனால், இப்போ அப்படி இவர்களால் இருக்க முடியல.. ஏன்னா, இங்கேதான் கூட்டத்தில் மூச்சு திணறுதே.. இதை வேறு வழியில்லாமல் எழுதியே ஆக வேண்டும்..

     குவார்ட்டர்கள்

    குவார்ட்டர்கள்

    பாஜகவில் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் அலைபவர்கள் யாரும் இல்லை.. அதெல்லாம் அடிக்க தெரியாமல் இல்லை நாங்க.. திரள்வது நிஜ கூட்டம்.. திமுகவில் 30 வருஷம் குப்பை கொட்டிட்டு இருந்தேன்.. அதிமுகவில் 18 வருஷம் சிங்கமான தலைவியுடன் இருந்தவன்.. ஸ்டாலினை எனக்கு பிடிக்கும்.. அவர் நல்ல மனுஷன்தான்.. கூட இருக்கிறதுதான் சரியில்லை.. நான் ஒன்னு அண்ணாமலையிடம் கேட்டுக்கறேன்.. சகோதரர் ஸ்டாலின் பேசுவதை விட்டுவிடுங்கள்.. ஏன்னா, அவர் ஊழல் பண்ண மாட்டார்.. ஏன்னா, 5 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர்.. அவர் போய் ஊழல் செய்வாரா?

     150 கோடி

    150 கோடி

    அண்ணாமலை மீது எனக்கு ஒரு கோபம் இருக்கு.. அது என்னன்னா, ஒரு அமைச்சர் லஞ்சம் வாங்க போறார்.. அந்த லஞ்சத்துக்கு 150 கோடிக்கு கையெழுத்து போடப் போறார்.. அதுக்கு பேனாவை திறக்கிறார்.. உடனே அண்ணாமலை, செய்தியாளர்களிடம், அந்த அமைச்சர் கையெழுத்து போட பேனாவை திறக்கிறார், 150 கோடி லஞ்சம் வாங்க போகிறார் என்று முன்கூட்டியே சொல்லி விஷயத்தை உடைத்து விடுகிறார்.. உடனே இதைக்கேட்டதும், அந்த அமைச்சர் பேனாவை உஷாராக மூடிவிடுகிறார்..

     கலைஞருக்கு நெருக்கம்

    கலைஞருக்கு நெருக்கம்

    இப்படி எல்லாரையும் லஞ்சம் வாங்குவரை அண்ணாமலை கெடுத்துட்டு இருந்தால் எப்படி? உடனே ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிவிட்டார்கள்.. சரி, மாத்திட்டீங்க.. அங்கே போய் ஊழல் செய்ய மாட்டாங்கன்னு உனக்கு தெரியுமா? இன்னைக்கு அண்ணாமலையை இவ்வளவு பெரிசா வளர்த்து விட்டதே திமுகதான்.. சென்னை முழுசும் நோண்டி வெச்சிருக்காங்க.. கேட்டால், சென்னையை சீர்திருத்தம் பண்ண போறாங்களாம்" என்றார்.

    English summary
    Actor Radharavi has criticized mk stalin and DMK government in bjp protest நடிகர் ராதாரவி திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்து பேசினார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X