நாறிடுவாங்க.. "லோக்கல் சரக்கு".. திரியை கொளுத்தி திமுக பக்கம் வீசிய நடிகர் ராதாரவி.. என்னாச்சு
நடிகர் ராதாரவி திமுக அரசை சீண்டி லோக்கல் சரக்கு பட விழாவில் பேசியுள்ளார்
சென்னை: நடிகர் ராதாரவி, திமுக அரசை மீண்டும் சீண்டி உள்ளார்.. திரைப்பட விழா ஒன்றில் ராதாரவி பேசியது இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு அதிரடியாக உத்தரவிட்டார்...
இது மக்களிடம் அப்போது நல்ல வரவேற்பை பெற்று தந்தது.. கடந்த சட்டமன்ற தேர்தலை எடுத்து கொண்டால், திமுகவின் தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்புமே வெளியாகவில்லை.. மது விலக்கு அறிவிப்பை திமுக தவிர்த்திருந்தது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

கனிமொழி
மதுவிலக்கை எதிர்த்து போரிட்டவர்களே, இப்போது கடைகளை திறந்து வைத்து ஆதரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.. சமீபத்தில்கூட, கல்லூரி மாணவிகள் மத்தியில் திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார்.. அப்போது ஒரு மாணவி கனிமொழியிடம், "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளதே.. போலீஸ்காரர்களே மது பழக்கத்திற்கு ஆளாகி வருவது வேதனையாக இருக்கிறது.. தமிழகத்தில் மது விற்பனை ஒரேடியாக நிறுத்தப்படுமா' என்று கேட்டார்.

ப்ராமிஸ்
இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத கனிமொழி, "திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவுமே சொல்லவில்லை.. அதனால், மதுக்கடைகளை மூடுவது என்பது இயலாத விஷயம்.. அதற்கு பதிலாக, அந்த கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்... இந்த பதில் பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்தது என்றாலும், கனிமொழி ஒன்றும் தவறாக சொல்லிவிடவில்லையே, தேர்தல் அறிக்கையில் இருந்து, அதை நிறைவேற்றாமல் இருந்தால் அதை பற்றி கேட்கலாம், ஆனால், இல்லாத ஒரு விஷயத்தை கேட்டால், அவர் அப்படித்தானே பதில் சொல்வார்? கனிமொழி சொல்லியது தவறில்லை" என்று ஆதரவுகளும் பெருகின.

பிரபல நடிகர்
இந்நிலையில், பிரபல நடிகரும், ஒவ்வொரு கட்சியாக ரவுண்டு அடித்து, தற்சமயம் பாஜகவில் அங்கம் வகிப்பவருமான ராதாரவி, மீண்டும் திமுக அரசை சீண்டியுள்ளார்.. லோக்கல் சரக்கு என்ற ஒரு பட விழாவில் ராதாரவி பேசியபோது, "லோக்கல் சரக்கு என்று நாம ரொம்ப சீப்பா சொல்லக்கூடாது.. காரணம், லோக்கல் சரக்கு இல்லாவிட்டால் அரசாங்கம் இயங்க முடியாது.. எங்கே, கடையை மூடசொல்லுங்க பார்ப்போம்.. யாராவது மூடறாங்களான்னு பார்ப்போம்.. கடையை மூடினால் நாறிப்போயிடும்.. ஏனென்றால் பெரிய வருமானம் அது..

ராதாரவி ஷாக்
ஒருமுறை குடிச்சதையே மறந்துட்டு, 2வது முறை குடிக்கிறானுங்க.. அந்த இடத்தை போய் விடுவாங்களா? சினிமாவை ஜனங்க இப்போவெல்லாம் பார்க்கிறதே கிடையாது.. ஆனால் அந்த கடையில இருக்கிற கூட்டம் எங்கேயுமே கிடையாது.. சரக்கு எங்கேடா தீர்ந்துவிடப்போகிறதோ என்று நினைத்து, கியூவில் முன்னாடி இருக்கிறவன் தலைமேல் மிதித்து நடந்து போய் சரக்கு வாங்கறான்.. முன்னாடியெல்லாம் இப்படித்தான் தியேட்டரில் டிக்கெட் வாங்குவாங்க.. இப்போ அந்த கடையில்தான் கூட்டம் நிறைகிறது" என்று பேசியுள்ளார்.

கேஷூவல்
ராதாரவி இந்த பேச்சுக்களை அவருக்கே உரிய பாணியில் கேஷூவலாக பேசினாரா அல்லது எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்ற முறையில் தாக்கி பேசினாரா என்று தெரியவில்லை.. ஆனால், தமிழகத்தின் நிதி நெருக்கடிகளுக்கும் டாஸ்மாக் மட்டுமே தீர்வா? "பூரண மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தியமே இல்லையா?" என்ற ஏக்கக் குரல்கள் தமிழக குடும்பங்களில் இருந்து நமக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது..!












Click it and Unblock the Notifications