சீமான் மட்டுமே தமிழ்த் தாயின் பிள்ளையா? ராகவா லாரன்ஸ் மீண்டும் கடும் தாக்கு
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகர் ராகவா லாரன்ஸ் மீண்டும் கடுமையாக தாக்கி பேசி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், சிறுவயதில் கமல்ஹாசன் சினிமா பட போஸ்டர்கள் மீது சாணி அடித்தேன் என பேசினார்.
அத்துடன் ரஜினிகாந்துக்கு எதிராக சீமான் பேசிவருவது நாட்டுக்கு நல்லது அல்ல என விமர்சித்தார். இதற்கு சீமானும் அவரது கட்சியினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

ராகவா லாரன்ஸ் மீண்டும் தாக்கு
இந்நிலையில் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ராகவா லாரன்ஸ் சீமான் பெயரை முதலில் குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

நாங்களும் தமிழ்த் தாய் பிள்ளைகள்
அவர் பேசுகையில், தாம் மட்டுமே தமிழ்த் தாயின் மூத்த பிள்ளை என பேசுகிறார்? அப்படியானால் நாங்கள் என்ன அமெரிக்கா தாயின் பிள்ளைகளா? நாங்களும் தமிழ்த் தாயின் பிள்ளைகள்தான் என்றார்.

இதுதான் ஆம்பளயா?
அரசியல் எனும் ஓட்டப்பந்தயத்தில் எல்லோரும் ஓடித்தான் வெற்றி பெறுவாங்க.. அதுதான் ஆம்பள.. ஆனால் தாம் மட்டுமே ஓடி வெற்றி பெறுவேன் என நினைப்பவர்களை என்ன சொல்வது?

பெயர் சொல்லி விமர்சிக்க...
விமர்சிப்பவர்களை பெயர் சொன்னால் தான் ஆம்பளைன்னு சொல்லுவாங்க. அவங்க பெயர் சொல்லி தான் நான் ஆம்பளை என நிருபிக்க வேண்டுமா..? உங்களை விட நான் நன்றாக பேசுவேன். நான் இராயபுரத்தில் பிறந்தவன் என்ன வேண்டுமானாலும் பேச முடியும். என்றார் ராகவா லாரன்ஸ்.

சீமான் பெயரை உச்சரிக்க கூடாது
அவர் தமது பேச்சின் போது சீமான் அண்ணா என குறிப்பிட்டு பேச முயற்சித்தார். ஆனால் சீமான் பெயரை உச்சரிக்கவே கூடாது என ரஜினி ரசிகர்கள் குரல் எழுப்பி கூச்சலிட்டனர். இதனால் நான் அவர் பெயரையே சொல்லவில்லை என கூறினார் ராகவா லாரன்ஸ்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications