’தலைவர்’ ரஜினிக்கு ஆதரவா பேசிட்டீங்க.. 4 வருஷ சண்டை ஓவர் அண்ணே... சீமானுக்கு ராகவா லாரன்ஸ் அழைப்பு!
சென்னை: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியது சர்ச்சையாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்து 'சமாதான' ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
4 ஆண்டுகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ், சீமான் இடையே கடும் மோதல் உருவானது. ரஜினிகாந்தின் தர்பார் பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்துக்கு எதிராக சீமான் பேசுவதை கடுமையாக கண்டித்தார். இதனால் நாம் தமிழர் கட்சியினர், ராகவா லாரன்ஸை விமர்சித்தனர்.

நீங்க மட்டும் தமிழ் தாய் பிள்ளையா?: இதன்பின்னர் சென்னையில் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலும் சீமான் பெயரை குறிப்பிடாமல், நீங்க மட்டும்தான் தமிழ் தாயின் பிள்ளையா? நாங்க எல்லாம் அமெரிக்கா தாயின் பிள்ளைகளா? நாங்களும் தமிழ்த் தாயின் பிள்ளைகள்தான்.
ஆம்பளைன்னா யாரு?: அரசியல் ஆட்டத்தில் ஓடித்தான் ஜெயிக்கனும்.. அதுதான் ஆம்பளை.. நான் மட்டுமே ஓடி நான் மட்டுமே ஜெயிக்கனும் நினைக்கக் கூடாது.. விமர்சிப்பவர்களை பெயர் சொல்லி சொன்னாத்தான் ஆம்பளையா? உங்களை விட நானும் நல்லா பேசுவேன்.. நான் சென்னை ராயபுரத்தில் பிறந்தவன்தான் என காட்டமாக பேசினார் ராகவா லாரன்ஸ். அப்போது ரஜினி ரசிகர்களும் ராகவா லாரன்ஸுக்கு ஆதரவாக நின்றனர்.
ரஜினிகாந்த்- யோகி சந்திப்பும் சர்ச்சையும்: இந்நிலையில் ஜெயிலர் படம் வெளியாகும் போது ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார். பின்னர் வட இந்திய மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அதேபோல உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினார் ரஜினிகாந்த். இது மிகப் பெரும் சர்ச்சையானது. இதற்கு ரஜினிகாந்தும், வயதில் சிறியவர்களாக இருந்தாலும் யோகிகள், சாமியார்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம் என விளக்கம் தந்திருந்தார்.
ரஜினிகாந்துக்கு சீமான் ஆதரவு: இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான், ரஜினிகாந்த் அமைதியை விரும்பி இமயமலை செல்கிறார். யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்தது அவரது சொந்த விருப்பம். அவரை தொல்லை செய்யக் கூடாது ரஜினிகாந்த் காலில் விழுந்துவிட்டதாலே வெங்காய விலை ஏறிவிட்டதா? என ஏகத்துக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
ராகவா லாரன்ஸ் நன்றி: சீமானின் இந்த ஆதரவு பேட்டியை பார்த்ததும் நெகிழ்ந்து போன ராகவா லாரன்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனை வரவேற்று பதிவு செய்துள்ளார். அதில், அண்ணன் சீமானுக்கு நன்றிகள். தலைவருக்கு எதிராக நீங்கள் பேசினால் நானும் உங்களுக்கு எதிராக பேசுவேன். இப்போது நீங்கள் அன்பாக பேசி இருக்கிறீர்கள். அதே அன்புடன் நானும் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன். அண்ணன் சீமானுக்கு மீண்டும் நன்றி என ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ளார்.
I just saw this interview of Annan Seeman. My heartfelt thanks to Annan seeman. When you have spoken against Thalaivar, I have also spoken against you but now when you are speaking with love. I will come and see you soon with the same love. Thanks once again Annan seeman 🙏🏼🙏🏼 pic.twitter.com/aX6VT3QcH6
— Raghava Lawrence (@offl_Lawrence) August 28, 2023
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications