ஐசியுவில் நடிகர் ரஜினிகாந்த்..? இரவு முழுவதும் தீவிர சிகிச்சை? பரபரப்பு தகவல்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக அம்மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
டெல்லியில் அண்மையில் ரஜினிகாந்த், தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். ரஜினிகாந்த் இந்த விருது பெற்றவர்களுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த். பின்னர் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் சிகிச்சை
ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சைக்குப் பின்னர் படப்பிடிப்புகளில் பங்கேற்றார். இதனால் மீண்டும் அவருக்கு உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார் ரஜினிகாந்த்.

டெல்லி விருது விழா- அண்ணாத்த படம்
பின்னர் தமிழகம் திரும்பிய ரஜினிகாந்த் அண்ணாத்தே திரைப்படப் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்நிலையில் டெல்லியில் இருந்து விருது பெற்று திரும்பிய நிலையில் தீபாவளியன்று வெளியாகும் அண்ணாத்த திரைப்படத்தை குடும்பத்தினருடன் பார்த்தார். அப்போது தம்மை பேரன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக ரஜினிகாந்த் ஹூட் ஆப்பில் தமது குரலில் பதிவு செய்திருந்தார். ரஜினி மகள் செளந்தர்யா விசாகன் உருவாக்கியதுதான் இந்த ஹூட் ஆப். அந்த பதிவில், நான், ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மனைவி மற்றும் பேரன்கள் அண்ணாத்த' படத்தை பார்த்தோம். சௌந்தர்யா மகன் வேத் என் பக்கத்திலேயே உட்கார்ந்து படத்தை பார்த்தான். படம் பார்த்து முடித்த உடனே அவன் என்னை கட்டி பிடித்து சில நிமிடங்கள் என்னை விடவே இல்லை என கூறியிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக விளக்கம் அளித்த லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம் என்று கூறினார்.

ஐசியூவில் சிகிச்சையா?
ஆனால் லேசான காய்ச்சல் இருந்ததால் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனை நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த், தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவான ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
