'என் அப்பா அப்படி இல்லை'.. மேடையில் ஐஸ்வர்யா அப்படி சொன்னதும் கண்கலங்கிய ரஜினி
சென்னை: சென்னை தாம்பரத்தில் நடந்த லால் சலாம் படத்தின் இசை வெளியிட்டு விழா மேடையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்படி சொன்னதும் , நடிகர் ரஜினிகாந்த் கண் கலங்கினார்.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கிரிக்கெட்டை மையப்படுத்தி 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்திருக்கிறார்கள்..

1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரியில் திரைக்கு வருகிறது. லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
இசை வெளியிட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், என்னோட அப்பாவை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும் போது மிகவும் கோபமாக இருந்துச்சு. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது அப்பா சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் இருக்க மாட்டார் என்றார். அப்போது மகளின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.
இதனிடையே விழாவில் விஷ்ணு விஷால் பேசுகையில், 'லால் சலாம்' படம் அரசியல் தாக்கங்கள் நிறைய உள்ளது. சூப்பர் ஸ்டார் நடிக்கும் இந்த படத்தில் நான் கதாநாயகன் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது. எனது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அஜித்குமார் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்தார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது, தனது மகளிடம் கதையை கேட்டது மற்றும் ஒகே சொன்னது எப்படி என்று விளக்கினார். மேலும் லால் சலாம் படத்தை தயாரிக்காதது குறித்து விளக்கிப்பேசிய ரஜினி, இந்த படத்தை பொறுத்தவரை ரஜினிகாந்தே இந்த படத்தை தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா?, கோடி கோடியா வச்சுருப்பார் என்று நிறைய பேர் பேசிகிட்டாங்க.'பாபா' படத்துக்கு பிறகு நமக்கு ராசியில்லை என்று படம் எடுப்பதை நிறுத்திட்டேன். நான் ஐஸ்வர்யாவிடம், நானே அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினேன். நம்ம வாழ்க்கையில நண்பர்கள் தான் ரொம்ப முக்கியம் என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications