விளக்கேற்றி மனமுருகி.. சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யாவா இது? ஆச்சர்யத்தில் மூழ்கிப் போன மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் தனுஷ் உடனான மணமுறிவுக்குப் பிறகு ஜிம் சைக்கிளிங் என தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்த நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா திடீரென ஆன்மீகப் பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளதோடு கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.

தமிழ் திரை உலகில் மிகவும் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் ரஜினிகாந்த என சொல்வார்கள் அந்த அளவுக்கு தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த்.

அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனின் சகோதரரும், இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனும், பிரபல நடிகருமான தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா - தனுஷ்

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் இருவருக்கும் யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திரை உலகின் சூப்பர் ஹிட் ஜோடியாக அறியப்பட்ட இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்தது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

திடீர் பிரிவு

திடீர் பிரிவு

அதில்," நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என கூறியிருந்தனர்.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தமிழக முழுவதும் இந்த விவகாரம் வெறும் பேசுபொருளாக மாறி இல்லை இருவரும் சாதாரண கருத்து வேறுபாடுகளால் தான் தற்போது தற்காலிகமாக பிரிந்து இருக்கிறார்கள் எனவும் விரைவில் இருவரும் இணைவார்கள் என தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறியிருந்தார். மேலும் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் உடன் மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டதாகவும் ஆனால் இருவரும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என விலகி விட்டதாக கூறப்படுகிறது.

ஜிம் - சைக்கிளிங்

ஜிம் - சைக்கிளிங்

ஐஸ்வர்யா - தனுஷ் குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வெளியான வகையில் தனது வழக்கமான பணிகளை தொடங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா. சமூக வலைதளங்களில் அதிகமாக உலாவும் பழக்கம் கொண்ட அவர் தொடர்ந்து ஜிம் மற்றும் சைக்கிளிங் செய்யும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் மேலும் மீண்டும் திரைப்படங்களை இயக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஆன்மீக நாட்டம்

ஆன்மீக நாட்டம்

இந்நிலையில் தான் திடீரென தனது பார்வையை ஆன்மீகத்தின் பக்கம் திருப்பி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவரது தந்தை ரஜினியும் ஆன்மீக நாட்டம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை திருவேற்காடு கோவிலில் சாதாரணமாக வந்து மனமுருகி வேண்டியதோடு விளக்கேற்றி பூஜை செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பார்த்து அங்கிருந்த மக்கள் ஒரு கணக்கு திகைத்துப் போயினர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா திருவேற்காடு கோவிலில் அம்மன் தரிசனம் செய்தேன் அம்மன் என்னை பார்த்து சிரித்ததோடு ஒருபோதும் பயப்படாதே எனக் கூறியதாக பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+