சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஸ்டாலின்.. உடல் நலன் குறித்து கேட்டறிந்த நடிகர் ரஜினிகாந்த், கமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த். தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் ஸ்டாலின் உடல்நலன் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் இன்று காலையில், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் வழக்கமாக ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.

Rajinikanth MK Stalin Kamal Haasan

உடனே இதற்கு பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தொலைபேசி வழியாக ஸ்டாலினின் உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து கேட்டறிந்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், ஸ்டாலின் உடல்நலன் குறித்து கேட்டறிந்துள்ளார். இதற்கிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+