அயோத்தி ராமர் கோவிலுக்கு வாங்க.. ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு.. அவர் சொன்ன வார்த்தை தான் ஹைலைட்
சென்னை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடும்பத்துடன் பங்கேற்கும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழை பெற்ற ரஜினிகாந்த் கூறிய வார்த்தை அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்த சட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2019ல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இடத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன்பிறகு பிரதமர் மோடி 2019ல் அடிக்கல் நாட்டினார். தற்போது அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் சிலையை எடுத்து வந்து வழங்க உள்ளார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். தற்போது ஒவ்வொருவருக்கும் கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் என்பது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வரும்படி நடிகர் ரஜினிகாந் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து இந்த அழைப்பிதழை வழங்கி உள்ளனர்.
எனது வாழ்நாளில் கிடைத்த அரும்பாக்கியமாக இன்றைய நிகழ்வு அமைந்தது!
— Ra.Arjunamurthy | ரா.அர்ஜூனமூர்த்தி (@RaArjunamurthy) January 2, 2024
நம் அன்பு தலைவர் திரு. @rajinikanth அவர்களை அவரது இல்லத்தில் சென்று அயோத்தி, ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22 ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டி ஆர்.எஸ்.எஸ்… pic.twitter.com/UcHakkRdLW
சென்னை போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் ஆர்எஸ்எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார், தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு) பிரகாஷ், மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர், மாநகர் பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் பாஜக சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர்.
அழைப்பிதழை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், இந்த விழாவில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி பாஜகவின் அர்ஜுன மூர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர், ‛‛எனது வாழ்நாளில் கிடைத்த அரும்பாக்கியமாக இன்றைய நிகழ்வு அமைந்தது! நம் அன்பு தலைவர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று அயோத்தி, ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டி ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் அழைப்பிதழ் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்'' என தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications