மன்றத்தின் வாட்ஸ் அப் குழுவில் யார் இருக்கலாம்? ரசிகர்களுக்கு ரஜினி புது கண்டிஷன்
Recommended Video

சென்னை:மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குழுமங்களில் சேர்க்கக்கூடாது என்று மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இதோ வருகிறேன்.... அதோ வருகிறேன் கூறி இன்னும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் ரஜினி, பாட்சா வெற்றி விழாவில் அரசியல் வசனம் பேசி கிட்டதட்ட 21 ஆண்டுகள் கடந்துவிட்டார். தற்போது பேட்ட வரைக்கும் இந்த 21 ஆண்டுளாக திரையில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்.
பாட்சா பட வெற்றி விழாவில் ஓபன் டாக்காக அவர் பேசியது.. இப்போது 21 வயதை கடந்து வாக்களிக்க தகுதியுடையவராகியுள்ள ஒவ்வொரு இளைய தலைமுறைக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் அண்மையில் வெளிவந்த கருத்து கணிப்பு கடுப்பையும் கிளப்பியதால் தான் என்னவோ... இன்னும் நாட்டில் நிலவும் எந்த நிகழ்வு குறித்தும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறார் ரஜினிகாந்த் (கேட்டால் என்னத்த சொல்ல போறாரு.. நான் இன்னும் அரசியலுக்கு முழுசா வரல்ல... வந்தப்பறோம் இத பற்றி கருத்து சொல்றேன்(இதை ரஜினி வாய்சில் படிக்கவும்)

பேட்ட திரைப்படம்
அதே நேரத்தில் பேட்ட படத்துக்காக தொலைக்காட்சிகளில் நொடிக்கு நொடி என்று கூறுமளவுக்கு அதன் டிரெய்லரும் மாஸ் வசனங்களும் தெறிக்க.. தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றன. சென்னை நீதிமன்றமும் தமது பங்குக்கு பேட்ட படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு தாக்கல்
இது தொடர்பாக பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காப்புரிமைச் சட்டத்திற்கு முரணாக 3710 இணையதளங்களிலும் ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதால் அதை தடை செய்ய இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்ட படத்தை இணைய தளத்தில் வெளியிட்டால் தங்கள் லாபம் பாதிக்கப்படும் என்றும் இணையதள சேவை வழங்கும் 37 நிறுவனங்கள் படத்தை ஒளிபரப்பக்கூடாது என்றும், 3710 சட்டவிரோத இணையதளங்களை முடக்க வேண்டும் என்று உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒளிப்பரப்ப நீதிமன்றம் தடை
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேட்ட படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பேட்ட படம் நீதிமன்றம் வரை சென்று மீண்டும் பரபரப்பாக்க.. ரசிகர்களையும் தம் பங்குக்கு அலற விட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

வாட்ஸ் அப் குழு கட்டுப்பாடு
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குழுமங்களில் சேர்க்கக்கூடாது என்று மன்ற நிர்வாகிகளுக்கு அவர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது குறித்து ரசிகர்களுக்காக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்
இதுகுறித்து, அவர் தனது மன்றத்தின் வாட்ஸ் அப் குழுக்களுக்கு விடுத்த அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டம், ஒன்றியம், நகரம் ஆகிய வாட்ஸ் அப் குழுக்களில் அந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

உறுப்பினர்களாக இருக்கக்கூடாது
அது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் யாரும் உறுப்பினர்களாக இடம் பெறக்கூடாது. மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி ஆகிய பெயர்களில் மட்டும் தான் குழுமங்கள் இருக்க வேண்டும். மனதிற்கு தோன்றும் பெயர்களை அதிகாரப்பூர்வ குழுக்களுக்கு வைக்கக்கூடாது.

நீக்கப்பட்டவர்களுக்கு இடம் கிடையாது
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் நடத்தும் அல்லது அவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் தமது நிர்வாகிகள் யாரும் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கக்கூடாது. மன்றத்தின் இந்த கட்டுப்பாட்டை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கடைபிடிக்க வேண்டும் என்பது தனது கட்டுப்பாடு என்று அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
-
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications