பேட்டியை கவனிச்சீங்களா.. மு.க. ஸ்டாலினை மறைமுகமாக வெறுப்பேற்றிய ரஜினிகாந்த்!
சென்னை: நேற்றைய தன்னுடைய பேட்டியில் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் மறைமுகமாக ஒரு பதிலடி தந்ததை கவனிக்க முடிந்தது.
Recommended Video
'அண்ணாத்த' படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். அவர் வருகையால் ஏற்கனவே செய்தியாளர்கள் சென்னை ஏர்போர்ட்டில் காத்து கிடந்தனர்.

பொதுவாக ஷூட்டிங் முடித்துவிட்டு வந்தால், ஏர்போர்ட்டிலேயே அந்த படம் சம்பந்தமாக ஏதாவது ரஜினி கருத்து சொல்வது வழக்கம்.
அதனால் எப்படியும் பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது... ஆனால் ரஜினி எந்த பேட்டியும் தரவே இல்லை.. நேராக வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.. அதன்பின் வழக்கம் போல வீட்டுக்கு வெளியே தெருவில் வைத்துதான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி தந்தார்.
அந்த பேட்டியில் "திஸ் ஈஸ் டூ மச்" என்று சொல்லி மத்திய அரசை தாக்கியும், தன்னை பாஜக ஆள் போன்று சித்தரித்து பேசுவது பிடிக்கவில்லை என்றும் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், ரஜினிகாந்த ஏன் ஏர்போர்ட்டில் பேட்டி தராமல் வீட்டின் கேட் முன் பேட்டி அளித்தது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன் சென்னை ராயபுரம் நிகழ்ச்சியில் முக ஸ்டாலின் பேசும்போது, ''யாராவது கேட்டை திறந்து வாசலில் நின்று பேட்டி அளித்தால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தலைப்புச் செய்தியாக வருகிறது. உண்மைச் செய்திகள் மறைக்கப்படுகிறது''என்று சொல்லி ரஜினிகாந்தைதான் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அதனால் ஸ்டாலினை வெறுப்பேற்றுவதற்காகவே திரும்பவும் கேட் முன்னாடியே நின்று ரஜினி பேட்டி தந்ததாக சொல்கிறார்கள்.. இதுதான் காரணமா? அல்லது கேட்டை திறந்து பேட்டி தந்தது யதேச்சையான ஒன்றாக என உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஒன்றும் மட்டும் உறுதியாக தெரிகிறது.. அந்த கேட் வாசலை விட்டு ரஜினி நகராமல் தொடர்ந்து அங்கேயே இருக்கிறார் என்பது மட்டும் நல்லா தெரியுது.. எப்ப அதைத் தாண்டி வருவார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications