இதுதான் ரஜினி.. சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் முன்னாடி பார்த்தீங்களா? சர்னு பறந்த 15 வண்டி
சென்னை: இன்று ரஜினிகாந்த் தன்னுடைய 73 வது பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண தொகையாக ரூ.6,000 அறிவித்திருக்கிறது தமிழக அரசு.. இந்த தொகையை ஒரு வார காலத்திற்குள் வழங்குவதற்கான பணிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன.
புயல் நிவாரணம்: இதனிடையே, மிக்ஜாம் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் ரூ.5,060 கோடி கேட்ட நிலையில் 450 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. அதேபோல, சென்னையில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற 561.29 கோடியையும் ஒதுக்கியது.

எனினும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. எனினும், மக்களுக்கு நிவாரணம் வழங்க போதாது என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் தாமாக முன்வந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண நிதியை கோடிகளில் வழங்கி வருகின்றனர்.
நடிகர்கள்: அதேபோல, பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைத்துறையினர் ஏராளமானோர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காசோலைகளை வழங்கி வருகின்றனர். சில நடிகர்கள் பாதிப்பு பகுதிகளில் நேரடியாக சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, நடிகை நயன்தாரா, நாடு படக்குழுவினர், விஜய் டிவி பாலா, விஜய் மக்கள் இயக்கத்தினர் என பலரும் மக்களுக்கு உதவிகளை வாரி வழங்கி வருகிறார்கள்.. நடிகர் சூர்யா-கார்த்தி முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ. 1 லட்சம், kpy பாலா ரூ.லட்சம் என பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
கோடம்பாக்கம்: அதேபோல, புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து லாரிகள் மூலம் மளிகை பொருட்கள், பெட்சீட் மற்றும் நிவாரண பொருட்கள், பெட்சீட் மற்றும் நிவாரண பொருட்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரஜினிகாந்த் பவுண்டேசன் மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அரிசி, ரவை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்களும், பாய், பெட்ஷீட் உள்ளிட்டவையும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கன்றன.. இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டத்தின் ரசிகர் மன்றம் மூலமாக வழங்கப்படுகின்றன.. இதில், ஒவ்வொரு மூட்டையிலும் ரஜினியின் போட்டோவும் பொறிக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள்: மொத்தம் 20 வகை நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.. அதே போல், அன்னதானமும் தற்போது பல இடங்களில் மன்றங்கள் சார்பாக நடந்து வருகிறது. இன்று ரஜினிகாந்த் பிறந்தநாள் என்பதால், ஏராளமான ரசிகர்கள், நிவாரண பணிகளில் களமிறங்கி உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications