என்னையும், எனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.. ரஜினிகாந்த் திடீர் அறிக்கை
Recommended Video

சென்னை: என்னையும் எனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 23ஆம் தேதி ரஜினிகாந்த் வெளியிட்ட ஒரு அறிக்கை ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அறிக்கையில், அரசியலில் சாதிப்பதற்கு மக்கள் மன்றத்தில் பணியாற்றுவது மட்டுமே போதும் என்று நினைத்திருந்தால் அது புத்தி பேதலித்து விட்டது என்பதற்கான அர்த்தம்.

காட்டமான அறிக்கை
மக்களின் ஆதரவைப் பெறுவது அவசியம். மக்கள் மன்றத்தின் மூலமாக அரசியலில் பதவி பெறலாம் என்று யாரும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். முதலில் உங்கள் பெற்றோரை கவனியுங்கள். இவ்வாறெல்லாம் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை ரஜினிகாந்த் வழங்கியிருந்தார்.

ரசிகர்கள்
இதனால் மூத்த ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று திடீரென, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார்.

மீண்டும் அறிக்கை
ரசிகர்களின் உள்ளத்தை புரிந்து கொண்ட ரஜினிகாந்த், இப்பொழுது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தான் ஏன் அந்த அறிக்கையை வெளியிட்டேன் என்பதற்கான விளக்கத்தை சில வரிகளில் தெரியப்படுத்தியுள்ளார்.

பிரிக்க முடியாது
"அக்டோபர் 23ஆம் தேதி மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். நான் கூறியது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மை, நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி. உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும், அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான். இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 23ம் தேதி நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினிகாந்த், இன்று சுருக்கமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications