"என்னை வாழவைக்கும்".. பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும்.. நன்றி தெரிவித்த நடிகர் ரஜினி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 74 வயது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், முன்னணி நட்சத்திரமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தின் 74வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும், அரசியல் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின், "எல்லைகள் கடந்து ஆறிலிருந்து 60 வரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால், ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்டவர் நண்பர் ரஜினி. அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலகில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதி, மனமகிழ்ச்சியோடு திகழ்ந்து மக்களை மகிழ்விக்க விழைகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர முதல்வர் நண்பர் சந்திரபாபு நாயுடுக்கும், மற்றும் ஓ.பன்னீர் செல்வம், வைகோ, வி.கே.சசிகலா, திருநாவுக்கரசர், துரைமுருகன், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.
வாசன், ஏ.சி.சண்முகம், சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், திரையுலகத்திலிருந்து நண்பர் கமலஹாசன், வைரமுத்து, S.P.முத்துராமன், விஜயகுமார், சத்யராஜ், பாலகிருஷ்ணா, ஷாருக்கான், அமீர்கான், பார்த்திபன், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications