நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவது எப்போது? வெளியான தகவல்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது எனவும், இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதனால் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது ரசிகர்கள் எதிபார்த்த நிலையில், தற்போது அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழகம் மட்டும் இன்றி இந்திய அளவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டு, கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருகிறது. விசாகப்பட்டினத்தில் படப்படிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தான் கடந்த 30 ஆம் தேதி இரவு நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழு ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தது. இதய குழாய் ரத்த நாளங்கள் சீராக உள்ளதா? என்பது குறித்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ பரிசோதனையில், இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் தமனியில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விஐபி வருகிறார்.. நடிகர் ரஜினிகாந்திற்காக நேற்று மாலையே ரெடியான அப்பல்லோ மருத்துவமனை?
அதை சரிசெய்யும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி லதா தெரிவித்தார். ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது எனவும் அவர் நலமாக இருக்கிறார். இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது ரசிகர்கள் எதிபார்த்தனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினிகாந்த் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் உடல் நிலையை மருத்துவர்கள் குழு இன்று பரிசோதித்ததில், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு வழங்க கூடிய மருந்து மாத்திரைகள் மூலம் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் நாளைய தினம் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
நடிகர் ரஜினிகாந்த், பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று முக்கிய பிரமுகர்களும், திரையுலகினரும், அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் விருப்பங்களையும், வாழ்த்துகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications