திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர் பாலு- நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
சென்னை: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளராக மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் பேராசிரியர் க. அன்பழகன், வயது முதுமையால் காலமானார். இதனையடுத்து திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது.

இந்த பதவிக்கு திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் போட்டியிட இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காலத்தினால் இந்த தேர்வு நடைபெறவில்லை. இதனால் பொருளாளர் பதவியிலேயே துரைமுருகன் நீடித்து வந்தார்.
இந்நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலுவும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த இரு பதவிகளுக்கு வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். திமுகவின் 4-வது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் துரைமுருகன். திமுகவில் இதுவரை அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பொதுச்செயலாளர்களாக இருந்துள்ளனர்.
இதனிடையே துரைமுருகன், டி.ஆர். பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள வாழ்த்து:
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications