நிகிதாவை விசாரிச்சீங்களா? ஏன் பம்முறீங்க! எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு! கொந்தளித்த ராஜ்கிரண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், அவர் மீது புகார் அளித்ததாகக் கூறப்படும் பெண் நிகிதாவை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என நடிகர் ராஜ்கிரண் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண்ணை விசாரித்ததாக இதுவரை எந்தச் செய்தியும் வரவில்லையே என்றும் அவர் வினவியுள்ளார்.

அஜித்குமார் லாக்-அப் மரணத்திற்குத் தமிழ்த் திரையுலகில் இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், நடிகர் சாந்தனு கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து ராஜ்கிரணும் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

ajith kumar rajkiran nikita

சாந்தனு கண்டனம்

நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் இதுவரை வாய் திறக்கவில்லை என விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், சாந்தனு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "அஜித்குமாரின் லாக்கப் மரணத்தில் இன்னொரு மனித உயிரை இழந்துள்ளோம். தாமதமாகப் பேசுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனினும் மௌனம் ஒரு சரியான வழி அல்ல. இன்னும் ஓர் அத்தியாயம், இன்னும் ஒரு வாழ்க்கை. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. #JusticeForAjithkumar" என்று பதிவிட்டிருந்தார்.

ராஜ்கிரண் பதிவு

தற்போது இந்த லாக்-அப் மரணம் குறித்து நடிகர் ராஜ்கிரணும் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "தம்பி அஜித்குமாரை, ஐந்து ஆறு காவல்துறையினர் சேர்ந்து, அடித்தே கொன்ற 'கொடுங்கொலை'யை நினைத்து நினைத்து நெஞ்சம் பதறுகிறது, இரத்தம் கொதிக்கிறது. இதுபற்றி சமூக வலைத்தளங்களில் எவ்வளவோ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றிற்கெல்லாம் மூல காரணமான, தம்பி அஜித்குமார் மீது புகார் அளித்ததாகக் கூறப்படும் 'நிகிதா' என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து விசாரித்ததாக இதுவரை எந்தச் செய்தியும் வந்ததாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது? ஏழை எளியவர் என்றால் உடனே பாயும் சட்டம், அதிகார வர்க்கத்திற்கு வேண்டியவர்கள் என்றால் பம்முமா? மக்கள் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு" என ராஜ்கிரண் குறிப்பிட்டுள்ளார்.

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அஜித்குமார். ஒரு பக்தரின் நகை காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தியதில் அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

காயங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் இருப்பதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உடலின் ஒரு பாகம் விடாமல் தாக்கப்பட்டுள்ளதாகவும், இது சாதாரண கொலை வழக்கு இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

காவலர்கள் கைது

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தனிப்படை காவல்துறையினரான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வீடியோ ஆதாரம் மற்றும் சாட்சி

அஜித்குமாரை காவல்துறையினர் கோயில் பின்புறம் வைத்து அடித்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் காவல்துறையினர் எந்தவித சீருடையும் அணியாமல் சாதாரண உடையில் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். செருப்புடன் அஜித்குமாரை கடுமையாக உதைக்கும் காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இந்த வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வீடியோவை ஆதாரமாகப் பதிவு செய்தார். அவருக்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சாட்சியம்

அஜித்குமாரை காவல்துறையினர் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தனக்குப் பரிசோதனையில் தெரிந்ததாகத் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+