ரஜினிகாந்த்... வந்தார்.. ஓட்டு போட்டார்.. சென்றார்.. வாயை திறக்கவே இல்லை.. கப்சிப்!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை வாக்களித்த பிறகு பேட்டியளிப்பதை தவிர்த்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.
பாஜகவின் நிழல், பாஜகவின் மறுபக்கம் என்ற சொல்லப்பட்ட ரஜினி அவ்வப்போது பேட்டி என்ற பெயரில் வாயை திறந்து அந்த யூகத்தை ஊர்ஜிதப்படுத்தி கொண்டே வந்தார்.
சமீபத்தில்கூட நதிகள் இணைப்பு எனும் அம்சத்தை தான் வரவேற்பதாக கூறி அதை நிரூபித்து விட்டு சென்றார். இதனால் வழக்கமான விமர்சனங்கள் ரஜினியின் இந்த பேட்டிக்கும் எழுந்தது.

மீடியாக்கள்
இந்த சமயத்தில்தான், இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு இன்று காலை சிக்னல் தருவதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் காலை 7 மணிக்கே ரஜினி வாக்களிக்க வந்துவிடுவார் என்று அவரது பிஆர்ஓ நேற்று காலையிலேயே அனைத்து மீடியாக்களுக்கும் தகவல் அனுப்பி விட்டார்.

ஆர்வம்
இதனால் வாக்கு வாக்கு சாவடிக்கு வெளியே ஏராளமான செய்தியாளர்கள் காத்திருந்தனர். ரஜினி ஓட்டு போட்டுவிட்டு என்னத்த சொல்லிவிட்டு போக போகிறாரோ என்று ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர்.

முதல் ஆள்
வழக்கமாக எப்போது தேர்தல் நடந்தாலும், அது நடிகர் சங்க தேர்தலாக இருந்தால்கூட முதல் ஆளாக வருபவர் ரஜினிதான்! எப்பவுமே அவருக்கு ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில்தான் ஓட்டு இருக்கும்! அதன்படியே இன்று காலை ரஜினி வாக்கு சாவடிக்கு வந்தார்.

உட்காருங்கள்
ரஜினியை பார்த்ததும் அந்த சாவடியில் இருப்பவர்கள் எல்லாம் ஏதோ பெரிய தலைவர் வந்துவிட்டதை போல எழுந்து நின்றார்கள். இத்தனைக்கும் அவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள்தான்! ஆனால் தன்னை பார்த்ததும் ஊழியர்கள் எழுந்து நிற்பதை பார்த்த ரஜினி "உட்காருங்கள்" என்று சொன்னார். பிறகு தன்னுடைய ஓட்டை போட்டுவிட்டு வெளியே வந்தார்.

தவிர்த்தார்
வெளியே வந்தவர் "சிக்னல்" தருவார் என்று பார்த்தால், எதுவுமே சொல்லாமல் கிளம்பிவிட்டார். எதனால் பேட்டியை தவிர்த்தார் என்று தெரியவில்லை. அட்லீஸ்ட் விரலை காட்டியாவது ஏதாவது சிக்னல் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது எதுவுமே இல்லாமல் ஓட்டை மட்டும் போட்டுவிட்டு விறுவிறுவென கிளம்பி சென்று விட்டார் ரஜினி!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications