அதிமுகவுக்கு ஊமைக்குத்து விட்ட ரஜினிகாந்த்? ஸ்டாலின் முன் சொன்ன அந்த வார்த்தை.. கவனிச்சீங்களா!
சென்னை: அமைச்சர் எவ வேலு எழுதிய ‛கலைஞர் எனும் தாய்'நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் இன்று பெற்று கொண்டார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகள் என்பது அவர் அதிமுகவை விமர்சனம் செய்தாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எவவேலு. இந்த நூல் வெளியீட்டு விழா இன்று மாலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றார். அதன்பிறகு அமைச்சர் எவ வேலு எழுதிய ‛கலைஞர் எனும் தாய்' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார். அதன்பிறகு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் முதல்வர் ஸ்டாலின் பற்றி பெருமையாக பேசினார்.
இந்த விழாவில் ஸ்டாலின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துகள் என்பது அவர் அதிமுகவுக்கு கொடுத்து ஊமைக்குத்தா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது 2 இடங்களில் முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அதுதான் தற்போது அதிமுகவை ரஜினிகாந்த் மறைமுகமாக சுட்டிக்காட்டினாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அதாவது ரஜினிகாந்த் பேசும்போது முதலில், ‛‛ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு பார்லிமென்ட் உள்பட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அவரது ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்தை சொல்லும். எத்தனை கட்சிகள் தங்களின் நிறுவன தலைவர் மறைந்த பிறகு சந்ததியினர் மூலம் கட்டிக்காக்க முயன்று தோல்வியடைந்துள்ளனர்.இன்னும் சிலர் திண்டாடி வருகின்றனர். இதனை நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள். பார்த்து இருப்பீர்கள். ஆனால் அதனை சர்வசாதாரணமாக ஸ்டாலின் செய்து வருகிறார்'' என்றார்.
அதேபோல் பேச்சின் இறுதியில், ‛‛நம்மில் சிலர் மட்டுமே இனத்துக்கு, சமூகத்துக்கு, சமூக நன்மைக்காக போராடி பாடுபட்டுள்ளனர். அதில் கருணாநிதி மிகவும் முக்கியமானார். அவர் சந்தித்த சோதனைகள், விமர்சனங்கள் வேறு யாராவது எதிர்கொண்டு இருந்தால் காணாமல் போய் இருப்பார்கள். விமர்சனங்கள் தேவை. அது மழை போல் இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்க கூடாது. புயல் மாதிரி இருந்தால் மரம் போல் சாய்ந்து விடும். ஆனால் கருணாநிதி ஆலமரம். வேர் ரொம்ப ஸ்ட்ராங்க். அவருடைய உடன்பிறப்புகள் வேர் ரொம்ப ஆழம். ரொம்ப ஸ்ட்ராங்க. யாராலும் அசைக்க முடியாது. ஆனால் 5 வருடம் கட்சி தலைமை இல்லாமலே கட்சியை காப்பாற்ற சிலர் திண்டாடுகிறார்கள். இதனால் ஸ்டாலின் செய்தது சாதாரண விஷயம் அல்ல'' என்றார்.
இந்த 2 இடத்திலும் நடிகர் ரஜினிகாந்த் கூறியது என்னவென்றால் திமுக தலைவராக கருணாநிதி மறைந்த பிறகு தலைவரான ஸ்டாலின் கட்சியை சிறப்பாக வெற்றியுடன் வழிநடத்தி வருகிறார். ஆனால் சிலர் கட்சிகளை காப்பாற்ற திண்டாடுகிறார்கள் என்பது தான். இதில் திண்டாடுகிறார்கள் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவை மனதில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அதிமுகவை வழிநடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு 4 ஆண்டு ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி நிறைவு செய்தார்.
ஆனால் அதன்பிறகு திமுக ஆட்சியை பிடித்த நிலையில் அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் 2021 முதல் அதிமுக தொடர்ந்து திமுகவுக்கு எதிராக தோல்வியை சந்தித்து வருகிறது. வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை வெல்ல வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்போது தான் அதிமுகவினர் உற்சாகமடைவார்கள். இத்தகைய சூழலில் தான் நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலினை பாராட்டினாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications