"ஏங்க, அந்த பையன் பாஸ் பண்ண வாய்ப்பே இல்லயே.. போலீஸ்ல சொல்றதை பொட்டிகடையில: பங்கம் செய்த எஸ்வி சேகர்
சென்னை: சென்னை: அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் குறித்து, அவரது பெயரை குறிப்பிடாமல், பிரபல நடிகர் எஸ்வி கமெண்ட் பதிவு செய்துள்ளார்.. பாஜக ஆதரவாளரான எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கள் பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துச்சாமி ஆகியோர் ஊழலில் ஈடுபட்டதாக புகார் கூறி இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடப்போவதாக கூறி வந்தார்.

அதன்படி, திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்த விவரங்களை அவர் நேற்றைய தினம் வெளியிட்டார். அதாவது, முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நெருக்கமானவர்கள் என பலரின் சொத்து மதிப்புகள் மொத்தமாக 1.31 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இருப்பதாக அந்த லிஸ்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.
திமுக லிஸ்ட்: மேலும், ரபேஃல் வாட்ச் விவகாரம் பேசுபொருளான நிலையில், அதற்கான விளக்கத்தையும் அண்ணாமலை கூறியிருந்தார்.. கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து வாட்சை வாங்கியதாகவும் அதற்கான ரசீது இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பிறகு பேசிய அவர், "நான் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. எல்லோரும் பூதகண்ணாடி கொண்டு பாருங்கள். 21ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.
மறைமுக செக்: ரூ. 200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக கைமாறியது . இதனை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன். இதில் மத்திய அரசின் 15 சதவீத பங்கு இருப்பதால் இதனை சிபிஐ விசாரிக்க முழு உரிமை உள்ளது. இது நம் ஜனநாயகத்திற்கான போராட்டம். ஊழல், லஞ்சம் குறித்து இப்போது கேள்வி கேட்காவிட்டால், தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு காத்துக்கொண்டு இருக்கிறது" என்றார். அடுத்தக்கட்ட லிஸ்ட் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். திமுகவை தவிர, பிற கட்சிகளும் இதில் அடக்கம் என்று கூறியிருப்பதால், அதிமுகவுக்கு மறைமுகமாகவே செக் வைப்பது போல இது தெரிகிறது.
அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் அனைவரும் அவர் மீது ஆதாரங்களைக் கேட்டு தமிழகம் முழுவதும் இருக்கும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்போவதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார். இன்னும் 15 நாட்களுக்குள் திமுகவின் சொத்து மதிப்பு பட்டியல் என வெளியிட்ட வீடியோவுக்கு முழு ஆதாரத்தையும் அண்ணாமலை கொடுக்கவில்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எஸ்.வி. சேகர்: ஆனால், திமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது குறித்து நடிகர் எஸ்வி சேகர் விமர்சித்துள்ளார். அதில் அவர் அண்ணாமலையை கிண்டலடித்தும் உள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என்னங்க அந்த பையன் பாஸ் பண்ண வாய்பே இல்லயே. ஏங்க இன்னிக்கு கேள்வி பேப்பர் கொடுத்தா அடுத்தவாரம்தான் பதில் சொல்லுவேங்கிறான். என்ன பரிட்சை எழுதி என்ன பிரயோஜனம். புக்கை பாத்துதான் எழுதினதா சொன்னாங்க. கடைசீல 10 வருஷ பழைய ஆனந்த விகடன் நக்கீரன் பாத்து எழுதின மாதிரி இருக்கு:" என பதிவிட்டுள்ளார்.
மற்றொருபதிவில், ஏங்க இந்த ஒரு மணி நேரமா இத்தனை கம்பிளெயிண்ட் சொல்றேன். சும்மா சிரிக்கிறீங்க. டேய் போலீஸ் ஸ்டாஷன்ல சொல்ல வேண்டியதை பொட்டிக்கடையில வந்து சொல்லிட்டிருக்க. இடத்தை காலி பண்ணு என்று பங்கமாய் கலாய்த்துள்ளார்.

கிண்டல் : அண்ணாமலை நேற்றைய தினம் ஊழல் லிஸ்ட் வெளியிட்டிருந்த நிலையில், திமுக பதிலடி தந்துவிட்டது.. அதிமுக கடுப்பாகி உள்ளது.. பாஜகவிலோ மூத்த தலைவர்கள் சத்தமின்றி இருக்கிறார்கள்.. யாருமே இதை பற்றி பெரிதாக கருத்து சொல்லவில்லை.. ஏற்கனவே, அண்ணாமலையின் செயல்பாடுகளால் சீனியர் தலைவர்கள், நொந்துபோயுள்ளதாகவும், அதிருப்தியால் மேலிடத்துக்கு புகார்களை கொண்டுபோனதாகவும் சொல்லப்பட்டு வருகிறது..
அடுத்த தலைவர் மாற போகிறார் என்றும்கூட செய்திகள் அரசல்புரசலாக வந்து கொண்டிருக்கின்றன.. பாஜகவுக்கு ஒரே எதிரி திமுகதான் என்றபோதிலும், நேற்றைய தினம் அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் குறித்து சீனியர்கள் அமைதி காத்து வருகிறார்கள்.. அந்தவகையில், பாஜக ஆதரவாளரான எஸ்வி சேகர் ஒருபடிமேலேபோய், அண்ணாமலையை கிண்டலடித்துள்ளது, பலரது கவனத்தையும் திரும்ப வைத்துள்ளது..!!
இதனிடையே, அண்ணாமலை மீது என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என திமுக முக்கிய புள்ளிகள் தீவிர ஆலோசனையில் இப்போது இறங்கியிருக்கிறார்களாம்.. ஆர்எஸ் பாரதி இதற்கு பதிலடியை தந்துவிட்டாலும்கூட, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடுத்தடுத்து 4 சீரிஸ்களை வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்திருப்பதால், அதனை தடுக்க வேண்டும் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம்.
எம்பி தேர்தல் வரப்போகும் நேரத்தில், இதுபோன்ற அவதூறுகளை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே தற்போதைய முதல் எண்ணமாக இருக்கிறதாம்.. ஆதாரங்கள் இல்லாமல் பொத்தாம்பொதுவாக கூறப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டிற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் திமுக முடிவெடுத்துள்ளது... அதேநேரத்தில், தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அண்ணாமலைக்கு அரசியல் "மைலேஜ்" தந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறதாம் திமுக தரப்பு.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications