சர்ச்சையில் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்'... சாதி பற்றி பேசிய நையாண்டி நாயகன் சந்தானம்
Recommended Video
சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள அக்யூஸ்ட் ஒன் என்கிற படத்தில், குறிப்பிட்ட சாதி குறித்து இழிவுபடுத்திப் பேசி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அப்படிப் பேசினால் தான் காமெடி வரும் என்று நடிகர் சந்தானம் மேடையில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
'தில்லுக்கு துட்டு 2'. படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது.

சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரித்துள்ள இந்தப் படம், நாளை (26 ந்தேதி) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன. காவல்நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
'அக்யூஸ்ட் ஒன்' என்கிற படத்தின் முன்னோட்ட காட்சியில் லோக்கல் பையனுக்கும், அக்ரஹாரப் பெண்ணுக்கும் காதல், காதலை நிரூபிக்க ஆம்லேட் சாப்பிடும் மாமி, மயங்கி விழும் தோப்பனார் என்பது போன்ற வசனக் காட்சிகள் இடம் பெற்றதற்காக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், 'அக்யூஸ்ட் ஒன்' படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் சந்தானம், சம்பந்தப்பட்ட சாதியின் பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டு, இரு நேர் எதிர் தரப்புகளை கலாய்த்தால்தான், சினிமா பார்க்க வரும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சந்தானம், தனக்கு எதிராக புகார் தெரிவித்தவர்களை சீப் பப்ளிசிட்டி என்றும் குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications