நான் பாஜகவில் இணைகிறேனா...? பிஸ்கோத் காமெடியை விட பெரிய காமெடியாக இருக்கே... கலாய்த்த சந்தானம்..!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் தாம் இணையவில்லை என்பதை நடிகர் சந்தானம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் இப்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். மறைந்த தோல் மருத்துவர் சேதுராமன் நடிகர் சந்தானத்திற்கு நெருங்கிய நண்பர் என்பதால், அவர் கொடுத்த ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களை கை கழுவிவிட்டு ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார்.

ஏற்கனவே நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்போது பிஸ்கோத் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சந்தானத்திடம், நீங்கள் பாஜகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறதே உண்மையா என கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதிலளித்த சந்தானம், தாம் பாஜகவில் இணையவில்லை என்றும் தாம் பாஜகவில் சேரப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், பாஜகவில் தாம் இணைவேன் என்பது பிஸ்கோத் திரைப்பட காமெடியை விட பெரிய காமெடி என சந்தானம் கலாய்த்தார்.
இதனிடையே சந்தானத்தின் இந்தப் பேட்டி பாஜக முகாமை கோபம் கொள்ளச் செய்துள்ளது. பாஜகவில் சேருவது சந்தானத்திற்கு காமெடியாக தெரிகிறதா என்றும் கட்சியில் சேர விரும்பினால் சேருவேன் என்றும் இல்லையென்றால் இணையமாட்டேன் எனவும் பதிலளிப்பதை விடுத்து தேவையின்றி பிஸ்கோத் பட காமெடியுடன் ஒப்பிட்டது தவறு எனவும் பாஜக தரப்பில் கருதப்படுகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications