விஜயகாந்த் உடலைப் பார்த்ததும் கதறி அழுத நடிகர் சத்யராஜ்.. கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமானார். விஜயகாந்த் உடலுக்கு நேற்று இரவு நடிகர் சத்யராஜ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்த் உடலை பார்த்ததும் சத்யராஜ் கதறி அழுதார்.
சினிமா உலகிலும் அரசியலிலும் முத்திரை பதித்த விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் மரண செய்தியை கேட்டு பிரேமலதா உடைந்து போனார். துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு கதறி அழுதார். மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் பிரேமலதாவை ஆறுதல்படுத்தினார்கள்.

தே.மு.தி.க.வினரும் கண்ணீர்விட்டு கதறினார்கள். இதனால் ஆஸ்பத்திரி முன்பு அழுகுரல் சத்தம் ஒலித்து கொண்டே இருந்தது. விஜயகாந்த் உடல் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டது. அவருடைய உடல் மீது தேமுதிக கொடி போர்த்தப்பட்டது. அவர் வழக்கமாக அணியும் கருப்பு நிற கண்ணாடி அவருக்கு அணிவிக்கப்பட்டது.
விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள், தேமுதிக தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் தொண்டர்கள் வெள்ளத்தல் நிரம்பி வழிந்தது. நேற்று இரவு நடிகர் சத்யராஜ் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் அவருடைய மகன்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.
நள்ளிரவை கடந்தும் தொண்டர்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இரவு முழுவதும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதிகாலை 4.30 மணியளவில் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு மதியம் 1 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இதன், பின்னர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் கொண்டு வரப்படுகிறது. அதன்பின்னர் அங்கேயே மாலை 4.45 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications