டெல்டா மக்களுக்கு இப்படியும் உதவலாம்.. இறங்கி வாங்க எல்லோரும்.. சிம்புவின் பலே ஐடியா
கஜா புயல் நிவாரணம் குறித்து சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவுவதற்கு, நிவாரண நிதி திரட்ட நடிகர் சிம்பு, புதிய யோசனையை கூறி அதை வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
டெல்டா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் நடிகர் சிம்பு யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே காவிரி விவகாரம் தொடர்பான பிரச்சனை இரு மாநிலத்திலும் வெடித்து முற்றி கிடந்த நேரத்தில் சிம்புவின் வித்தியாசமான கோரிக்கை அனைவரையும் ஈர்த்தது.
|
வைரல் வேண்டுகோள்
"கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீரை பகிர்ந்து அதனை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்" என்று சிம்புவின் இந்த நெகிழ்ச்சி வேண்டுகோளை கண்டு உண்மையிலேயே மாநில மக்களின் பதட்டம், கோவம், ஆவேசத்தை கொஞ்சமாவது தணிக்க உதவியது உண்மையே.

யுவன்சங்கர் ராஜா
இதேபோல கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரண உதவி குறித்து சிம்பு மற்றொரு வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிம்பு பேசியுள்ளதாவது:

வருத்தமா இருக்கு
"டெல்டாவை பத்தி எல்லாருக்கும் தெரியும். ரொம்ப வருத்தமா இருக்கு. என்னால முடிஞ்ச உதவிய நா பண்ணிடுவேன். என் ஃபேன்ஸூம் பண்ணிட்டு இருக்காங்க. இது போக நிறைய பேர் உதவி பண்ணிட்டு இருக்காங்க. இதுமாதிரியான பிரச்னையில நாம கொடுக்குற காசு போய் சேருதா இல்லையா. சேர்ந்த காசு அவங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்காங்குறது பெரிய கேள்வியா இருக்கு.

செல்போன் நெட்வொர்க்
நா ஒரு ஹெல்ப் பண்றனு நெனச்சா என்னால அரச நேரடியா தொடர்புகொண்டு கொடுக்க முடியுது. ஆனா, ஒரு பாமரனால 10 ரூபா கொடுக்கணும்னு நெனச்சாலும் அதுக்கான வழி இல்லாம இருக்கு. தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மக்களும் உதவி பண்ண எனக்கு ஒரு ஐடியா தோணுச்சி. எல்லாரும் செல்போன் யூஸ் பண்றோம். முடிஞ்சவங்க 100 ரூபாயும், முடியாதவங்க 10 ரூபாயும் செல்போன் நெட்வொர்க் மூலமாக காசு கொடுக்குறதுக்கான வழி இருக்கு.

ஓபனா காட்டணும்
இதுக்கு எல்லா நெட்வொர்க்கும் இணைந்து யார் எவ்ளோ காசு கொடுத்துருக்காங்கனு லிஸ்ட் காட்டி, அந்த காச நாங்க டெல்டாக்கு அனுப்பிருக்கோம்னு அரசு ஓபனா காட்றதா இருந்தா; நடந்தா, நம்ம எல்லாரும் சேர்ந்து இத பண்ண முடியும்.

சேவ் டெல்டா
இந்த விஷயம் சரியா இருந்தா, ஐடியா ஓகேனு இருந்தா #uniteforhumanity #unitefordelta போடுங்க. இது நடந்தா சம்பந்தப்பட்டவங்களுக்கு காசு கொண்டுபோய் சேர்க்க முடியும். எல்லாம் வல்ல இறைவன் இருக்காரு. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நெனக்கிறேன். சேவ் டெல்டா" என்று சிம்பு பேசியிருக்கிறார்.

யாருமே செய்யாதது
இதுவரை எந்த பெரிய நடிகரும் கஜா புயலுக்கு நேரடியாக வீடியோ வெளியிடாத நிலையில் தற்போது சிம்பு அதை செய்துள்ளதை பாதிக்கப்பட்ட மக்கள் என்றில்லாமல் எல்லோரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications