சால்வையை வெடுக்குன்னு வாங்கிய நடிகர் சிவக்குமார்! சிரித்து சமாளித்த கே.எஸ்.அழகிரி! ரிசப்ஷன் ருசிகரம்
சென்னை: சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடமிருந்து, சால்வையை வெடுக்கென வாங்கிய நடிகர் சிவக்குமார், அதை மீண்டும் அழகிரிக்கே அணிவித்து மகிழ்ந்தார்.
தனது கையிலிருந்து நடிகர் சிவக்குமார் சால்வையை வெடுக்கென வாங்கிய அந்த தருணத்தில் சிரித்துக் கொண்டே சமாளித்தார் கே.எஸ்.அழகிரி.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மகள் திருமண வரவேற்பு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடக தேர்தல் பணி காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
இதனிடையே மேடையில் மணமக்களை வாழ்த்த வந்த அனைத்து முக்கியப் பிரமுகர்களுக்கும் கே.எஸ்.அழகிரி சால்வை அணிவித்து வரவேற்றார். அந்த வகையில் நடிகர் சிவக்குமாரையும் அது போல் வரவேற்க கையில் சால்வையை பிரித்துக் கொண்டிருந்தார்.
இதை கவனித்த நடிகர் சிவக்குமார், முதலில் அதை இங்கே கொடுங்க என உரிமையோடு கேட்டதோடு மட்டுமல்லாமல் கே.எஸ்.அழகிரியிடமிருந்து, சால்வையை வெடுக்கென வாங்கி அதை மீண்டும் அழகிரிக்கே அணிவித்து மகிழ்ந்தார்.
நடிகர் சிவக்குமார் உண்மையிலேயே டென்ஷன் ஆகிவிட்டாரோ என மேடைக்கு கீழிருந்தவர்கள் ஒரு நொடி பதறிப்போனார்கள். ஆனால் அவர் அழகிரி மீதுள்ள உரிமை காரணமாக இவ்வாறு நடந்துகொண்டார்.
மகள் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்திய கே.எஸ்.அழகிரி, வரவேற்பு விழாவையும் மிகவும் எளிமையாக நடத்தியிருக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications