உதயநிதி பக்கத்துல சூரி.. தவெகவை மீறி படம் வருமா? விஜய் ரசிகர்களுக்கு நச் பதில்! இதை பாருங்க
மதுரை: திரை கலைஞர்களுக்கு அரசியல் சாயம் பூசி, ஓரம் கட்டுவது என்பது காலங்காலமாக தமிழ் சினிமாவில் நடந்து வரும் சமாச்சாரம்தான். அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதிக்கு சால்வை அணிவித்ததால், நடிகர் சூரிக்கு திமுக சாயம் பூசப்பட்டு, விஜய்க்கு எதிராக நிறுத்தப்பட்டார். இந்த விமர்சனத்திற்கு அவர் அளித்திருக்கும் பதில் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது.
எம்ஜிஆர்-சிவாஜி கணேசன் காலத்திலிருந்து நடிகர்களுக்கு அரசியல் சாயம் என்பது இருந்து வருகிறது. அந்த சமயத்தில் காங்கிரஸ் வெயிட்டான பார்ட்டி. திரைத்துறையை பொறுத்தவரை எம்ஜிஆர் vs சிவாஜி கணேசன் என்றுதான் களம் இருந்தது. அதேபோல எம்ஜிஆர் திமுகவுக்கும், சிவாஜி காங்கிரஸ் பக்கமும் இருந்தனர். எனவே ரசிகர் பட்டாளமும் இரு துருவமாக இருந்தது.

அரசியலும் நடிர்களும்
இன்று இந்த அளவுக்கு கூர்மையான அரசியலில் நடிகர்கள் இல்லையென்றாலும், இந்த நடிகர் இந்த கட்சிக்காரர்தான் என்று அறிய முடிகிறது. அதிலும் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர், அவரை எதிர்ப்பவர்கள் எல்லாம் திமுகவினர் என்று குறிப்பிடப்பட்டு வந்தனர். அப்படித்தான் தற்போது சூரியும் சிக்கியிருக்கிறார். மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த பல பிரபலங்களில் அவரும் ஒருவர்.
உதயநிதியும் சூரியும்
போட்டியை பார்த்துக்கொண்டிருந்தபோது உதயநிதியும் வர, அவருக்கு சால்வை அணிவித்து வெண்கல காளை சிற்பம் ஒன்றையும் பரிசாக கொடுத்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், சூரி இனி திமுக பக்கம் போய்விட்டார் என்றும், இதன் பின்னர் தவெகவை எதிர்த்து எப்படி இவரது படம் வெளியாகும்? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த விமர்சனங்கள் மிரட்டல் தொனியில் இருந்திருக்கின்றன.
மதிப்பும் பொறுப்பும்
இருப்பினும் இந்த மிரட்டலுக்கு சூரி நிதானமாக பதிலளித்துள்ளார். அவர் கூறியுள்ள பதில் சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. தனது x பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது,
"தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக, சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்.
கன்டென்ட்தான் கிங்
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை, அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King. அதை தீர்மானிப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல; அதை பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான்.
நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும்; இல்லன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை" என்று கூறியுள்ளார். அவருடைய கருத்து திரைக்கலைஞர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
