ஸ்டாலின் அங்கிள்! அரசியல் தாண்டி.. எல்லோரையும் மதிக்க வேண்டும்.. விஜய்க்கு சூரி சொன்ன அறிவுரை!
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் மாநட்டில் தமிழக முதல்வரை விமர்சனம் குறித்து பேசியதற்கு எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாரும் வேண்டும், அதனால் நல்லவிதமாக அரசியலில் தாண்டி எல்லாரும் எல்லாத்தையும் மதிக்க வேண்டும் என்று நடிகர் சூரி பேட்டி அளித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்து திரும்பி வரும் பொழுது சூரியை பார்த்த ரசிகர்கள் சூரியை சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூரி

விஜய் குறித்து நடிகர் சூரி பேட்டி
எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் இன்று எனக்கும் என் தம்பிக்கும் பிறந்தநாள் ராமன் லட்சுமணன் நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள் ராமன் என்ற பெயர் சூரியாக மாரியிருக்கு அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள் அது கிடையாது அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள் அண்ணன்கள் தான் முழு காரணம் அம்மன் உணவகத்தால் தான் எனக்கு பெருமை.
மாமன் படப்பிடிப்புக்கு பிறகு அடுத்த படம் மண்டாடி படம் பிடிப்பு நடைபெற்று வருகிறது வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு எப்படியோ அதேபோல் கடலில் போட் ரேசிங் கடலில் வீர விளையாட்டான மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும் திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் குறைந்து வருகிறார்கள் குறித்த கேள்விக்கு, திரையில் காமெடிகள் நல்லா போய்க் கொண்டிருக்கிறது அடுத்தடுத்து எல்லாரும் வர வேண்டும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க நல்லா வந்திருக்கேன் அதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்
விஜய் மாநாட்டில் முதல்வர் விமர்சனர் குறித்த கேள்விக்கு, இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாரும் வேண்டும் நல்லவிதமாக அரசியலில் தாண்டி எல்லாரும் எல்லாத்தையும் மதிக்க வேண்டும் இன்னைக்கு விஜய் ஒதுங்கி அரசியல் போயிருக்கார் அடுத்து திருப்பி வரலாம் அனைவருக்கும் விஜய் பிடிக்கும் எனக்கும் அவருக்கு பிடிக்கும் என்னையும் அவர் பிடிக்கும் அரசியல் செல்வது அவருடைய விருப்பம் என்று தெரிவித்தார்.
அங்கிள் விஜய் - ஸ்டாலின் விமர்சனம்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பாஜகவையும், திமுகவையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தங்கள் கட்சியின் ஒரே கொள்கை ரீதியான எதிரி பாஜகதான் என்றும், அரசியல் ரீதியான எதிரி திமுகதான் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், டீலிங் போட்டு கூட்டணி அமைக்கும் கட்சி தங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் கட்சி உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜகவுடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை என விஜய் சுட்டிக் காட்டினார். தவெக முன்னெடுக்கும் அரசியல் உண்மை, உணர்வுபூர்வம், மற்றும் நல்ல அரசியல் மட்டுமே என்றும், நல்லது மட்டுமே செய்யும் அரசியல் என்றும் அவர் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்றும், வேறு போட்டி இருக்காது என்றும் விஜய் சவால் விட்டார். திமுக கூட்டணி அமைத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதாகவும் அவர் விமர்சித்தார். எம்ஜிஆர் இருக்கும் வரை யாராலும் முதல்வராக ஆக முடியவில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகவும், ஒரு ரெய்டு வந்ததும் உடனடியாக டெல்லிக்குச் சென்று ரகசியச் சந்திப்புகளை நடத்துவதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். முதல்வர் ஸ்டாலினை "ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங் அங்கிள்" என விமர்சித்தார். "மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்" என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications