பிரதர்.. உங்க நல்ல மனசுக்கு.. உதயநிதியை புகழ்ந்த சூரி.. திமுகவில் இணைந்துவிட்டாரா? பின்னணி என்ன?
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவி வரும் திமுக இளைஞரணி செயலாளர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சூரி உதவியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை: ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவி வரும் திமுக இளைஞரணி செயலாளர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சூரி உதவியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஒன்றரை மாதமாக ஊரடங்கு இருப்பதால் மக்கள் அடிப்படை பொருட்களுக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுக்க கஷ்டப்படும் மக்களுக்கு திமுகவினர் தீவிரமாக உதவி செய்து வருகிறார்கள். இதற்காக திமுகவின் படை தமிழகம் முழுக்க களமிறக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி
முக்கியமாக திமுகவின் இளைஞரணி தீவிரமாக உதவி செய்து வருகிறது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கு திமுகவினர் உதவி வருகிறார்கள். இந்த நிலையில் உதயநிதிக்கு நடிகர் சூரியும் இந்த செயல்பாட்டில் உதவி இருக்கிறார். அதாவது மக்களுக்கு உதவி செய்து வரும் உதயநிதியின் செயல்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் சூரியும் பொருட்கள் மற்றும் நிதி கொடுத்து உதவி இருக்கிறார்.
|
நன்றி சொன்ன உதயநிதி
இதற்கு உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், என் பெயரிலான ரசிகர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் 7500 குடும்பங்களுக்கு வழங்கக்கோரி அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை மன்ற செயலாளர் பாபு, து.செயலாளர் கலீம், ராஜ்குமார் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகளிடம் பகிர்ந்தளித்தேன். தாமாக முன்வந்து உதவிய அண்ணன் சூரி அவர்களுக்கு நன்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.
|
நடிகர் சூரி டிவிட்
உதயநிதியின் இந்த டிவிட் இணையம் முழுக்க பெரிய அளவில் வைரல் ஆனது. இதற்கு நடிகர் சூரி பதில் அளித்துள்ளார். அதில், பிரதர் இவ்வளவு குடும்பங்களுக்கு உதவி செய்த உங்க நல்ல மனசுக்கும் உங்கள் ரசிகர் மன்றத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பிரதர் நன்றி, என்று குறிப்பிட்டுள்ளார். சூரியின் இந்த டிவிட்டும் பெரிய அளவில் டிரெண்டாகி உள்ளது.

திமுகவில் சேர்ந்துவிட்டாரா?
இந்த நிலையில் சூரி திமுகவில் இணைந்துவிட்டாரா என்று பலரும் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். ஆனால் சூரி திமுகவில் இணையவில்லை என்கிறார்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் பொதுவாக என் மனசு தங்கம் தொடங்கி மூன்று படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதனால் தற்போது மாறி மாறி உதவி செய்துள்ளனர் என்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications