“திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு..” கிண்டல் செய்த பதிவுக்கு நடிகர் சூரி கொடுத்த செம பதில்
சென்னை: தனது சொந்த ஊரில் நடிகர் சூரி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி வீடியோ வெளியிட்டார். அந்த பதிவில் ஒருவர் சூரியை திட்டி கமெண்ட் பதிவிட்டிருந்தார். இதற்கு சூரி கொடுத்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
காமெடி நடிகராக இருந்து தற்போது நாயகனாக படங்களில் நடித்து வருகிறார் சூரி. விடுதலை, கருடன், மாமன் என சூரி நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளன. பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது.

சூரி தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ் , மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி🙏💝 pic.twitter.com/WtrQe4QL3D
— Actor Soori (@sooriofficial) October 21, 2025
நாயகனாக நடிக்கத் தொடங்கிய பின் சூரி மீது விமர்சனங்களும் வெறுப்பு கருத்துகளும் சமூக வலைதளத்தில் அதிகளவில் கொட்டப்படுகின்றன. அந்த வகையில் சூரியின் எக்ஸ் பக்கத்தில் அவரை புண்படுத்தும் விதமாக ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அவருக்கு சூரி கொடுத்த பதில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊரான ராஜாக்கூரில் சொந்த பந்தங்களுடன் கொண்டாடிய சூரி அதனை வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரல் ஆனது. அந்தப் பதிவின் கீழ் ஒருவர் "திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு நடிகர் சூரி சற்றும் கோபப்படாமல் "திண்ணையில் இல்லை நண்பா பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான். அந்தப் பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் " எனப் பதில் அளித்துள்ளார். சூரியின் இந்த ரிப்ளை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications