விஜய், ஜோதிகா வரிசையில் நடிகர் சூரி.. சர்ச்சை பேச்சு!.. அதென்ன ஆ..ஊனா! இந்து அமைப்புகள் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒருவனுக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மம் பேசும் என நடிகர் சூரி பேசியிருப்பது இந்து அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கார்த்தி, அதீதி நடிப்பில் உருவான விருமன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர்,நடிகர் சூரி, நடிகர் கார்த்தி, நடிகை அதீதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசுகையில் சூர்யாவின் அறக்கட்டளையை குறிப்பிட்டு பேசினார். அவர் பேசுகையில் ஆயிரம் கோயில்கள், அன்னச்சத்திரங்கள் கட்டுவதை விட ஒருவனுக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மம் பேசும் என தெரிவித்திருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

சூரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அதென்ன எப்போதும் கோயில்களை பற்றியே பேசுகிறார்கள், ஏன் மசூதி, சர்ச் பற்றியெல்லாம் பேச தைரியம் இல்லையா என இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்களிலும் பலர் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். "ஏன் எப்போது பார்த்தாலும் கோயில்கள் கட்டுவது குறித்து மட்டும் ஒப்பிடப்படுகிறது? இப்போது யார் கோயில்களை கட்டுகிறார்கள், எல்லாமே அரசர்கள் கட்டிய கோயில்கள்தான் தமிழகத்தில் இருக்கின்றன. இவையெல்லாம் கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை என்ற கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

ஜோதிகா

ஜோதிகா

ஏற்கெனவே ஜோதிகா ஒரு முறை இந்து கோயில்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. "கோயில்களுக்கு செலவு செய்யும் தொகையை பள்ளிக் கூட பராமரிப்பு மற்றும் மருத்துவமனை பராமரிப்பு பணிகளுக்கு செலவு செய்யுங்கள் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிகா பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மெர்சல் திரைப்படம்

மெர்சல் திரைப்படம்

அது போல் மெர்சல் திரைப்படத்தில் ஊர் மக்கள் கோயில் கட்டி வருவார்கள். ஆனால் அந்த கிராமத்தில் மருத்துவமனை இல்லாமல் பல கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை இருக்கும். இதனால் பல உயிர்கள் பறி போகும். இந்த நேரத்தில் விஜய், இப்போ கோயில் கட்டி என்ன பண்ணப் போறோம்? நம்ம ஊரில் ஆஸ்பத்திரி கட்டுவோம் என்பார். இந்த வசனங்களும் இந்து அமைப்புகள், பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+