"சார் பெரிய வீடு கட்டிட்டேன்".. மேடையில் மாணவி சொன்ன வார்த்தை.. அகரம் விழாவில் கண்கலங்கிய சூர்யா
சென்னை: ‛‛சார் நான் அண்ணா பல்கலைக்கழகத்தின் Gold Medalist. டிசிஎஸ்க்கு பிறகு இன்போசிஸ் போனேன். எனக்கு ஒரெயொரு கனவு தான். என் அம்மா, அப்பா நிம்மதியாக தூங்க வேண்டும். 4 ரூப் இருப்பது போல் வீடு வேண்டும் என்பது தான் லட்சியமாக இருந்தது. இப்போது நான் ரொம்ப பெரிய வீடு கட்டிவிட்டேன்'' என்று பூரித்து பேசினார். அதனை கேட்ட நடிகர் சூர்யா கண்கலங்கி கைத்தட்டி உற்சாகப்படுத்தியது அனைவரையும் நெகிழ வைத்தது.
நடிகர் சூர்யா ‛அகரம் பவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன்மூலம் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். குறிப்பாக ஏழை மாணவ-மணவிகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ‛அகரம் பவுண்டேஷன்' உதவியில் படித்த பல மாணவர்கள் பிரபல நிறுவனங்களில் பணியில் உள்ளனர். டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தான் சூர்யாவின் 'அகரம் பவுண்டேஷன்' 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார், தம்பி கார்த்திக், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் வெற்றி மாறன், இயக்குநர் ஞானவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேடையில் மாணவி ஒருவர் பேசியபோது இருக்கையில் அமர்ந்திருந்த நடிகர் சூர்யா கண்கலங்கினார். அதாவது மாணவி ஒருவர், ‛‛என் படிப்புக்கு உதவி கேட்டு அகரம் பவுண்டேஷனிடம் போய் நின்றேன். career Guidance கொடுத்தார்கள். அதை ஃபாலோ செய்தேன். திரும்ப நன்றாக படித்தேன். சார்(சூர்யா) நான் அண்ணா பல்கலைக்கழகத்தின் Gold Medalist. அதன்பிறகு டிசிஎஸ்க்கு போனேன். அங்கு பணி செய்தேன். நிறைய அனுபவம் கிடைத்தது. என்னோ டீமை லீட் செய்தேன்.
அதன்பிறகு இன்போசிஸ் போனேன். எனக்கு ஒரெயொரு கனவு தான். என் அம்மா, அப்பா நிம்மதியாக தூங்க வேண்டும். 4 ரூப் இருப்பது போல் வீடு வேண்டும் என்பது தான் லட்சியமாக இருந்தது. இப்போது நான் ரொம்ப பெரிய வீடு கட்டிவிட்டேன்'' என்றார்.
இதை கேட்டவுடன் இருக்கையில் அமர்ந்திருந்த நடிகர் சூர்யா கண்கலங்கினார். அதோடு கைகளை தட்டி மாணவியை ஊக்கப்படுத்தினார். இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, ‛‛கல்வி தான் ஆயுதம், அதுவே அகரத்தின் நம்பிக்கை'' என்று கூறினா்.












Click it and Unblock the Notifications