நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா.. கங்குவா படப்பிடிப்பில் ஷாக்.. ரோப் கேமரா விழுந்து விபத்து!
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே ‛கங்குவா' படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு என்பது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‛பான் இந்தியா' திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை 3டி முறையிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது இந்த படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் சூர்யா நடிக்கும் சண்டை காட்சிகள் சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இதற்காக அங்கு அரங்குகள் அமைத்து சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்று அங்கு சண்டை காட்சி திரைப்படமாக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடித்தார்.
ரோப் கேமரா உதவியுடன் இந்த சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதை கண்டவுடன் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அலறியுள்ளனர். இதையடுத்து சுதாரித்து கொண்ட நடிகர் சூர்யாவும் விலக முயன்றுள்ளார். ஆனால் ரோப் கேமரா அவரது தோளில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் லேசான காயமடைந்துள்ளார். இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நசரத் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கி உள்ளனர். ஈவிபி பிலிம் சிட்டியில் இதுபோன்ற விபத்து நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல விபத்துகள் நடந்துள்ளன.
முன்னதாக இங்கு நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்தது. அப்போது கிரேன் அறுந்து 2 பேர் இறந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். அதேபோல் நடிகர் ரஜினியின் ‛காலா' திரைப்பட சூட்டிங்கின்பேது மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்து போனார். அதன்பிறகு நடிகர் விஜயின் ‛பிகில்' படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து ஒருவர் இறந்தார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்து அவர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications