இது மட்டும் நடந்தால்.. அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கமாட்டார்! சஸ்பென்ஸ் உடைத்த எஸ்.வி.சேகர்!
சென்னை: அண்ணாமலைக்கு தனது பையன் வயது கூட கிடையாது என்றும் அவர் பின்னால் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு ஓட வேண்டிய அவசியம் தனக்கில்லை எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
ஒரு பையன் தேர்வு எழுதுவதற்கு முன்பு நான் 100க்கு 100 வாங்கிவிடுவேன் என கூறுவான், கடைசியில் தேர்வு முடிவை பார்த்தால் தான் தெரியும் அந்தப் பையன் இரண்டரை மார்க் மட்டுமே வாங்கியிருப்பது என்று கூறிய எஸ்.வி.சேகர், அண்ணாமலை கதையும் இப்படித்தான் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் பாஜக வளர்ந்ததா வளரவில்லையா என்பது தெரிய வரும் என்றார்.

அண்ணாமலைக்கு தன்னை தவிர வேறு யாரும் பாஜகவில் இருப்பது பிடிக்காது என்று சாடிய எஸ்.வி.சேகர், அதிமுக -பாஜக கூட்டணி ஏற்பட்டால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கமாட்டார் என மிக ஆணித்தரமாக கூறினார். 10 வருடமாக துப்பாக்கியை பிடித்தேன் எனக் கூறும் அண்ணாமலை, ஒரு முறையாவது டிரிக்கரை அழுத்தியிருப்பாரா என வினவினார்.
ஏடிஎம் வாசலில் நிற்கும் காவலாளி கையில் கூடத்தான் துப்பாக்கி இருக்கிறது என்று அண்ணாமலையை கலாய்த்த எஸ்.வி.சேகர், துப்பாக்கி பிடித்த கை என்று கூறினால் அண்ணாமலை என்ன பெரிய ஆளா என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பினார். அண்ணாமலையின் வாய்ச்சவடால் பாஜகவுக்கு தான் பின்னடைவை தரும் என்று கூறிய அவர் தனக்கென்று ஒரு மறைமுக அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
அண்ணாமலை இப்போது செய்து கொண்டிருக்கும் செயல்கள் எல்லாமே சுயநலத்துடன் தன்னுடைய பெயரையும், புகழையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்து கொண்டிருக்கிறார் எனவும் எஸ்.வி.சேகர் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications