அண்ணாமலை வங்கிக் கணக்கில் ஏற்பட்ட மாற்றம்.. எஸ்.வி.சேகர் பரபர தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறார்கள். அதிமுக மற்றும் பாஜக கட்சியில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் நடிகரும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான எஸ்.வி சேகர், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 3 சதவீதம் வாக்கு வங்கி தான் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கஸ்தூரி, அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களில் பரபரப்பாக உள்ளனர். ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணியும் முட்டி மோதி வருகின்றன. நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலுக்கு முன்பு பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி. சேகர், "கஸ்தூரி போன்றவர்கள் மிகவும் புத்திசாலிகள். பெரிய பெரிய நேர்காணல் எல்லாம் கொடுப்பார். அந்த மூளை பாஜக எனும் மதவாதக் கட்சிக்கு சென்றவுடன் மழுங்கிவிட்டது. எதை சொல்வதென்று தெரியாமல் உளறி கொண்டிருக்கிறார். கஸ்தூரி எனக்கு நன்கு அறிமுகமானவர் தான். நிறைய புத்திசாலித்தனத்தை கொண்டவர்.
அண்ணாமலை பூஜ்ஜியம்
அந்த புத்திசாலித்தனத்தை எல்லாம் அடகு வைத்து, அண்ணாமலை ஏதோ சாதித்து காட்டுவார் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை ஒன்றுமில்லை, அவர் பூஜ்ஜியம் எதையும் சாதிக்க மாட்டார் என்பதை நான் 3 வருடங்களுக்கு முன்பே சொல்லிவிட்டேன். பலரும் நான் ஏதோ அண்ணாமலைக்கு விரோதி என்று நினைத்தார்கள்.
இன்றைக்கு அண்ணாமலை பெரிய பூஜ்ஜியம் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அவரின் வங்கிக் கணக்கில் மட்டும் பூஜ்ஜியத்திற்கு அருகே நிறைய 1,2 எண்களை போட்டுக் கொண்டார். அது வேறு விஷயம். அதை அமித்ஷா பார்த்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார். என்ன செய்து என்ன ஆகப் போகிறது. கட்சி இன்னும் வளரவில்லை.
பாஜக 3 சதவீதம் தான்
பாஜக என்கிற கட்சி தமிழ்நாட்டில் இன்னும் வளரவே இல்லை. சும்மா 10 பேரை உடன் வைத்துக் கொண்டு, அவன் வாங்கிய 80, 90 மதிப்பெண்களை எல்லாம் இவர்கள் வாங்கியது போல எத்தனை காலம் சொல்ல முடியும். அந்த 3 சதவீதம் தாண்டி பாஜக தமிழ்நாட்டில் இல்லவே இல்லை. பாஜக என்பது மிகப்பெரிய பாராங்கல். அதைக் கட்டி கொண்டு யார் கூட்டணியில் குதித்தாலும் குதிப்பவர்களுக்கு தான் நட்டம்.
அந்த கல் அப்படியே தான் இருக்கும். பாஜக 3 சதவீதம் வாக்கு வங்கியிலேயே தான் இருக்கும். அமித்ஷா தமிழ்நாடு வந்து ஒரு மாதம் தங்கினாலும், மோடி வந்து தமிழ்நாட்டில் தங்கினாலும் மாறப் போவதில்லை. 4 சீட் என்பது இன்னும் 2 சீட்டாக வேண்டுமானால் மாறலாம். முழுக்க முழுக்க திராவிட கலாச்சாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் கட்சி தமிழ்நாடு பாஜக.
மீண்டும் திமுக ஆட்சி
அவர்களை தேசிய கட்சி என்று சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. இந்த 2026 தேர்தலில் இப்போதுள்ள நிலையில் எந்த மாற்றமும் இல்லாத பட்சத்தில் மீண்டும் திமுக தான் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும். ஸ்டாலின் தான் முதலமைச்சராவார். திமுக ஏழாவது முறையாக ஆட்சியை பிடிக்கும்." என்றார்.
-
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications