ரகுவரனுக்கு நிறைய கேர்ள் பிரென்ட்ஸ்.. குஷ்பு- சுந்தர். சி காதல் கதை.. நடிகர் விச்சு சுவாரஸ்யம்
சென்னை: நடிகை குஷ்புவும் இயக்குநர் சுந்தர் சியும் காதலிக்கிறார்கள் என்பது அந்த யூனிட்டுக்கே எப்படி தெரியும் என்பது குறித்து நடிகர் விச்சு என்கிற விஸ்வநாதன் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு சந்தன காற்று எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் விச்சு என்கிற விஸ்வநாதன். இதனை அடுத்து பல படங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு முறைமாமன் எனும் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின்போதுதான் உதவி இயக்குநராக இருந்த சுந்தர் சியுடன் விச்சுவுக்கு நட்பு கிடைத்தது. அது போல் ராதிகாவின் தயாரிப்பு நிறுவனத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.
அண்மையில் சுந்தர் சியின் அரண்மனை படத்திலும் இவர் நடித்திருந்தார். இவர் அண்மையில் வெளியாகியுள்ள காஃபி வித் காதல் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 120 ஆவது படமாகும். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் இதுவரை 35 படங்களில் நடித்துள்ளார்.

யூடியூப் சேனல்
இவர் டூரிங் டாக்கிஸ் எனும் யூடியூப் சேனலுக்கு சித்ரா லட்சுமணனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான், ஆர்வி உதயகுமார், ரகுவரன், நித்யானந்தன் ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தவர்கள். நான் சினிமாவுக்குள் போய்விடக் கூடாது என்பதற்காக என்னை என் அப்பா வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். அங்கு நான் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தேன். இளையராஜா படத்திற்கு ஆட்டிஷன் போனேன். ஆனால் சான்ஸ் கிடைக்கவில்லை.

மணிவண்ணன்
அப்போது மணிவண்ணன் என்னை பார்த்து சந்தனகாற்று எனும் படத்தில் வில்லனாக நடிக்கிறாயா என கேட்டார். நான் சரி என்றேன். நானும் ரகுவரனும் நண்பர்கள். ரகுவரன் ஒரே ஒரு நோட்டுடன் கல்லூரிக்கு வருவார். அந்த கல்லூரிக்கு எதிரே அவருடைய ஹோட்டல் இருந்தது. அங்குதான் ரகுவரன் இருப்பார். அங்கு அவரது அப்பா வெளியே சென்றவுடன் நாங்களும் அப்படியே அந்த ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வருவோம்.

ரகுவரனுக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள்
கல்லூரியில் ரகுவரனுக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள் இருந்தனர். உயரமாக ஸ்டைலா இருப்பார். அதனால் பெண்கள் அவருடன் பழக விரும்புவர். நாங்கள் 10 வார்த்தை பேசினால் அவர் ஒரு வார்த்தை பேசுவார். வீரப்பதக்கம் படத்தில் நடித்து கொண்டிருந்த போது என் மாமனார் எனக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார். அப்போது ராதிகாவிடம் மனோபாலா போய் அவர்தான் விச்சுவோட மாமனார் என கூறியுள்ளார். ஆனால் ராதிகாவுக்கு என் மாமனார் இறந்துவிட்டதாக தவறுதலாக காதில் விழுந்துவிட்டது.

மாமனார் இறப்பு
உடனே ராதிகா என்னிடம் வந்து ஹே விச்சு உன் மாமனார் இறந்துவிட்டாராமே என்றதும் அருகில் இருந்த எனது மாமனார், இரு கைகளை தூக்கி நான்தாங்க அவருடைய மாமனார் என சொன்னதும், சாரிங்க , மனோபாலா வந்து என்னை குழப்பிவிட்டார் என ராதிகா கூறினார். இதை ராதிகா எப்போதும் சொல்லி சொல்லி சிரிப்பார். நான் சந்தன காற்று படத்தில் வில்லனாக நடித்த போது சுந்தர் சி உதவி இயக்குநர். இந்த படத்தில் குஷ்புவுக்கும் சுந்தர் சிக்கும் காதல் ஏற்பட்டதை நான்தான் முதலில் கண்டுபிடித்தேன்.

காதல் கதை
ஒரு போட் ரேஸுக்காக நானும் சுந்தரும் ஒரு காரில் போனோம். அப்போது மொபைல் போன் எல்லாம் இல்லை, ஆனால் சுந்தர் சி வழியில் கிடைக்கும் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் நின்று போன் பேசி விட்டு வருவார். நடுராத்திரியிலும் வண்டியை நிறுத்தி பேசுவார். அவருடைய வீட்டுக்கு இத்தனை போன் பேசும் அளவுக்கு செண்டிமென்ட்டான ஆள் இவர் இல்லை என்பதால் , நானே என்ன இத்தனை போன் பேசுறீங்க என கேட்டேன், உடனே சுந்தர் சிரித்துவிட்டார். அடுத்த நாள் குஷ்புடன் காதல் என்பதை கண்டுபிடித்துவிட்டேன். இவ்வாறு விச்சு தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications