பிரபல நடிகர் ஒரே போடு.. "நான் திமுககாரன் தான்".. டக்கென திரும்பிய அண்ணாமலை.. ஹாட் வள்ளுவர் கோட்டம்
நடிகர் விக்னேஷ் திமுக அரசை கண்டித்து வள்ளுவர் கோட்ட நிகழ்வில் பேசினார்
சென்னை: வள்ளுவர் கோட்டத்தில்.. தமிழக பாஜக நடத்திவரும், உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விக்னேஷ் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Recommended Video
சின்னதாயி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ்.. கிழக்கு சீமையிலே, பசும்பொன், செல்லக்கண்ணு, ராமன் அப்துல்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழக மக்களின் மனங்களில் குடியேறியவர்..
சமீபத்தில், இரிடியம் மோசடி கும்பலிடம் ரூ.1.81 கோடியை இவர் இழந்துவிட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், அது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்திருந்தார் விக்னேஷ்..

டைரக்டர்கள்
இந்நிலையில், இவர் கடந்த மாதம் திடீரென பாஜகவில் சேர்ந்தார்.. பாஜகவில் பொதுவாக, பல நடிகர்களும், பிரபலங்களும் இணைந்து வருவது வழக்கம்.. இவர்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கும், பாஜக பயன்படுத்தி கொள்வது இயல்பு.. அந்த வகையில், விரைவில் எம்பி தேர்தலும் வர உள்ள நிலையில், பல நடிகர்களும் இயக்குனர்களும் பாஜக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.. எனவே, நடிகர் விக்னேஷூம் பாஜகவில் இணைந்தார்.. அது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகின..

நடிகர் விக்னேஷ்
இன்றைய தினம் திமுகவை கண்டித்து, தமிழக பாஜக உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.. இதில், பாஜக தலைவர்கள் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.. நடிகர் விக்னேஷ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அவர் அப்போது பேசியதாவது:

தாமரைகள்
"நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.. நம் சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒரு அரங்கத்துக்கு சென்றால் எப்படி அதிருமோ, அதைவிட அதிகமாக, நம் தலைவர் அண்ணாமலைக்கு அதிர்வுகள் தமிழகத்தில் எழுந்துள்ளன.. தாமரை தமிழகத்தில் மலரும்வரை நாம் ஓயக்கூடாது.. உங்களை எல்லாம் நான் தொண்டர்களாக பார்க்கவில்லை.. மந்திரிகளாக பார்க்கிறேன், எம்எல்ஏக்களாக பார்க்கிறேன்.. நான் முழுக்க முழுக்க திமுககாரன்.. என் உறவினர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், எல்லாருமே திமுககாரர்கள்.. ஏன்? நானும் திமுககாரன்தான்..

திமுககாரன்
காலம் காலமாக, என் தாத்தா, அப்பா என எல்லாருமே திமுகதான்.. ஆனா இந்த திமுக, அதிமுகவும், இந்த தமிழ்நாட்டுக்கு இத்தனை காலம் என்ன செய்திருக்காங்கன்னு யோசிச்சேன்.. அப்பறம்தான் தெரிந்தது, கருணாநிதி குடும்பம் மட்டுமே வாழ்ந்துட்டு இருக்கு.. ஆனால், மத்திய பாஜக அரசியல் யார் மீதாவது லஞ்ச புகார் சொல்ல முடியுமா? திமுகவில் குடும்ப அரசியல்.. இது என்ன மன்னராட்சியா? இதெல்லாம் யோசிக்க வேண்டாமா? ஆண்டவன் நமக்கு அறிவை தந்திருக்கிறான்.. யோசிக்கணும்.. இந்த கொள்ளைக்கார கும்பலிடம் இருந்து இந்த தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.. அதற்காக வருங்கால முதல்வர் அண்ணாமலையின் கரங்களை நாம் அனைவரும் வலு சேர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications