3 நாள் சண்டை முடிஞ்சது.. ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய்-திருமா! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் குறித்து காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன். இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் விஜய்யும், திருமாவளவனும் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவெக எனும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று முன் தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்தேறி இருக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார்.
இது பல விமர்சங்களை பெற்றுள்ளது. பகுத்தறிவுக் கொள்கையில் முதலாவது கடவுள் மறுப்பு எனும் பெரியாரிய ஆதரவாளர்கள் விஜய் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சிக்கின்றனர். அதே நேரத்தில் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், விஜயின் கருத்து கருவாட்டு சாம்பார் போல் உள்ளது என கூறினார். இதேபோல் பாஜக, திமுக, விசிகவினரும் விஜயை விமர்சித்து வருகின்றனர்.
ஒருபடி மேலே போய் விஜயை விமர்சித்து அறிக்கை விட்டதோடு, திருவண்ணாமலையில் நீண்ட பேட்டியையும் கொடுத்திருந்தார் திருமா. மேலும், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாவை பொறுத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்றாலே பாஜக எதிர்ப்பு தான் சங்பரிவார் எதிர்ப்பு தான். ஆக 'நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று சொல்லக்கூடாது' என நான் சொல்ல முடியாது அது அவருடைய கருத்து. அப்படி என்றால் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என அனைவரையுமே பாசிஸ்டுகள் என கேலி செய்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது என கூறியிருந்தார்.
அதே நேரத்தில் விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் விஜயும், திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் பிரபல இதழ் ஒன்றின் சார்பாக அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியலில் விஜய் குறித்து காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வரும் திருமாவளவன் தற்போது விஜய்யுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அரசியலில் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications