விஜய் மக்கள் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜுக்கு என்ன பதவி.. விஜய் சுவாரஸ்யம்.. இங்கேயும் LCUவா?
சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இணைந்தால் அவருக்கு என்ன பதவி கொடுப்பார் என்பதை நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை தாண்டியதால் அந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடந்த இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். மேலும் இந்த படத்தில் நடித்தவர்களும் பங்கேற்றனர். விஜய் அவருடைய படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் குட்டி ஸ்டோரி சொல்வார்.
இது மிகவும் வைரலாகும். ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். அண்மையில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை எழுந்த போது ரஜினிகாந்த் ஜெயிலர் பட இசைவெளியீட்டு விழாவில் காக்கா கழுகு கதை சொன்னார். இதனால் இதற்கு பதிலடியாக விஜய் லியோ இசை வெளியீட்டு விழாவில் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த விழாவை தயாரிப்பு நிறுவனம் நடத்தாமல் ரத்து செய்துவிட்டது. இந்த நிலையில் லியோ வெற்றி விழா கொண்டாட்டம் என்ற அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த விழாவுக்கு போலீஸார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக் கூடாது என்பதால் நேரு உள்விளையாட்டரங்கை சுற்றி நிறைய போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பாஸ் இருக்கும் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விஐபிகள் செல்வதற்கு ஒரு வழி, ரசிகர்கள் செல்வதற்கு ஒரு வழி என வைக்கப்பட்டிருந்தது. அது போல் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கும் தனி வழி இருந்தது. இந்த விழாவுக்கு 5000-க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். பாஸ், விஜய் மக்கள் இயக்கத்தின் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு மேல் ரசிகர்கள் அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். விஜய்யும் விழா மேடைக்கு மாலை 6 மணிக்கு வந்தார். இந்த படத்தில் நடித்தவர்கள் பேசி முடித்ததும் விஜய்யிடம் தொகுப்பாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். அந்த கேள்விகள் பின்வருமாறு:
கல்வி: எல்லாருக்கும் சரிசமமா கிடைக்க வேண்டிய விஷயம்
புகழ்: அர்ஜுன் சார், முதல்வன் படத்துல அவரோட பேர்
மக்கள்: புடிச்சா தட்டி கொடுப்பாங்க.. புடிக்கலைன்னா தட்டி விட்ருவாங்க
எம்ஜிஆர்: இதுவரைக்கும் தோல்வியே காணாத தலைவன்
2026 - 2025க்கு அப்புறம் வர்ற வருஷம், புட்பால் வேர்ல்ட் கப்.. கப்பு முக்கியம் பிகிலு
கேள்வி: லோகேஷ் உங்க கட்சியில சேர்ந்தா, அவருக்கு என்ன பதவி கொடுப்பிங்க
விஜய் பதில்: போதைப்பொருள் தடுப்பு பிரிவு.

இவ்வாறு விஜய் பேசி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அது போல் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். லேகோஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் போதை பொருள் ஒழிப்பு குறித்தே இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களில் முந்தைய படங்களின் காட்சிகள் இருந்ததால் இதை Lokesh Cinematic Universe (LCU) என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications