இளம்வாக்காளர்களுக்கு குறி? நடிகர் விஜயின் அடுத்த மூவ்.. +2, 10ம் வகுப்பு மாணவர்களுடன் சந்திப்பு! ஆஹா
சென்னை: நடிகர் விஜய் விரைவில் அரசியலில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. முதற்கட்டமாக சட்டசபை தொகுதிகள், வாக்காளர்களின் விபரங்களை நடிகர் விஜய் சேகரித்து வரும் நிலையில் இளம்வாக்காளர்களை கவரும் வகையில் நடிகர் விஜய் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி கிப்ட் வழங்க முடிவு செய்துள்ளார். மேலும் இதன் பின்னணியில் உள்ள பரபரப்பான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. நடிகர் ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் மீதான எதிர்பார்த்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவரது படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் புதிய படங்களின்போது அவர் அரசியல் சார்ந்து ஏதேனும் கருத்து தெரிவிக்கிறாரா? என்பது பற்றி உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல மாவட்டங்களில் வெற்றி பெற்றனர். அதன்பிறகு அவர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் விரைவில் நடிகர் விஜய் அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
மேலும் இதற்கு வலு சேர்க்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதோடு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள், அவர்கள் சார்ந்த கட்சிகள், அவர்கள் பெற்ற ஓட்டுகள், தொகுதியின் 10 முக்கிய இடங்கள் உள்பட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இது நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருகிறார் என்பதற்கு வலு சேர்க்கின்றன.
இந்நிலையில் தான் தற்போது நடிகர் விஜய் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு கிப்ட் வழங்க முடிவு செய்துள்ளாராம். அதாவது மாவட்ட வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களை சென்னைக்கு வரவழைத்து சந்தித்து பேச நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.
மேலும் அவர்களை பாராட்டி கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மாவட்டம் வாரியாக 3 மாணவ-மாணவிகளின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், 'ஆதார்' அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை வழங்கவும் கேட்டு கொள்ளப்ப்டடுள்ளது.
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டம், ரத்ததானம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ளனர். தற்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை, கல்வி உதவித்தொகை வழங்குவதன் மூலம் அவர்களின் சப்போர்ட்டையும் பெறலாம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் நம்புகின்றனர்.
-
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
விஜயிடம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்திருக்கிறேன்.. அதில் அவர் சொன்ன விஷயம் இதுதான்! ஓபனாக உடைத்த கோபிநாத் -
அன்று சிரஞ்சீவி.. இன்று விஜய்.. இத்தனை ஒற்றுமைகளா? ரிசல்ட் எப்படி இருக்கும்? -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
"மிஸ்ராவை மிஸ் பண்ணிடாதீங்க"! வீல்சேரில் வந்த பொன்னம்பலமா இது! தவெகவுக்கு பிரச்சாரம் செய்றாரே! -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
Vijay: ஒரு நாள் பிரச்சாரம்! அடுத்த நாள் ரெஸ்ட்! தவெகவுக்கே ஓட்டு கேட்காத விஜய்! காங்கிரஸ் தப்பியது! -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
பிரச்சாரக் களத்துக்கு வரும் கமல்ஹாசன்.. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளும் டார்கெட்! -
“ஜனநாயகன் லீக்.. அதிர்ச்சியளிக்கிறது!” அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்












Click it and Unblock the Notifications