அடடே அரசியலுக்கான மாற்றம்! இனி ”விஜய்” மட்டும்தான்.. ஜோசப் விஜய் இல்லை.. இளைய தளபதி இல்லை!
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் தம்முடன் ஒட்டிக் கொண்ட 'இளைய தளபதி' பட்டமும் இல்லை.. இதுவரை தாம் பயன்படுத்திய ஜோசப் விஜய் முழு பெயரும் இல்லை என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டு அரசியலில் புதிய வரவாக நடிகர் விஜய் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்துள்ளார் நடிகர் விஜய். தற்போதைய லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை; 2026 சட்டசபை தேர்தலில்தான் போட்டி- அதிகாரத்தை கைப்பற்றுவோம் என அறிவித்துள்ளார் விஜய்.

அதாவது இன்னும் 2 ஆண்டுகள் கழித்தே தேர்தல் அரசியலில் இறங்குவார் நடிகர் விஜய். அதற்குள் தாம் ஒப்புக் கொண்ட சினிமாக்களையும் முடித்து கொடுத்துவிட்டு களத்துக்கு வருகிறார் விஜய். இப்போதே விஜய்யை மையமாக வைத்து விவாதங்கள் களைகட்டிக் கொண்டிருக்கின்றன.
2026 சட்டசபை தேர்தலில் சின்ன தளபதி (அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்) Vs இளைய தளபதி இடையேதான் மோதலா? என்கிற விவாதம் ஒரு பக்கம்.. தளபதிகள் மோதுங்க.. கேப்டன் நாங்கதான் என்கிற சீமான் தரப்பு மைண்ட் வாய்ஸ் இன்னொரு பக்கம். அதைவிட ஏங்க ' இளையதளபதி' பட்டத்தையே துறந்துவிட்டுதானே அறிக்கையே வெளியிட்டிருக்கிறார் விஜய்.. இளைய தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டங்களை முன்வைத்துதான் எத்தனை அக்கப்போர்! சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக குட்டிக் கதைகள் மூலம் ரஜினியும் விஜய்யும் மேடைகளில் முட்டி மோதிக் கொண்டுதானே இருக்கின்றனர். இருதரப்பு ரசிகர்களால் ஒவ்வொரு முறையும் சமூக வலைதளதளங்கள் ரணகளமாகித்தான் போகின்றன. இப்போது இளையதளபதி பட்டத்தையே துறந்துவிட்டார்.. அதை கவனியுங்க முதலில் என்கிற ஒருதரப்பு குரல்கள். ஆமாம் நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு அறிக்கையில், "விஜய்" என்று மட்டும்தான் இடம்பெற்றுள்ளது.
பொதுவாக விஜய் வெளியிட்ட இதற்கு முந்தைய அறிக்கைகளில் கூட ஜோசப் விஜய் என இடம் பெறும். ஜோசப் விஜய் என்ற பெயரை வைத்துதான் பாஜகவினரும் கூட கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இப்போது ஜோசப் விஜய்யும் இல்லை- இளையதளபதியும் இல்லை.. வெறும் "விஜய்".. வர்லாம்.. வர்லாம்.. வாங்க என்கிற ரேஞ்சில் அறிக்கை வெளியிட்டுள்ளார். விஜய்யை சுற்றிய இந்த அதகளம் லோக்சபா தேர்தல் களத்தை இன்னும் அதகளப்படுத்தும் என்றே தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications