விஜய் விருது வழங்கும் விழா! முதல் ஆளாக வந்த திருநங்கை மாணவி நிவேதா! எங்களுக்கான அரசு..பளீர் பேச்சு.!
சென்னை: 2022- 23 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை இன்று இரண்டாம் கட்டமாக சந்தித்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இந்த நிலையில் கடந்த +2 பொதுத் தேர்வில் தமிழகத்தில் ஒரே ஒரு திருநங்கை மாணவியாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற நிவேதாவை அவர் இன்று பரிசளித்து கௌரவிக்கிறார்.
நடிகராக உயர்ந்து தற்போது அரசியல்வாதியாக களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியிருக்கிறார். கடந்த 2022-2023 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் சந்தித்தது தமிழக முழுவதும், பேசுபொருளானது.

இதை அடுத்து 2023 -2024ஆம் கல்வியாண்டில் 234 தொகுதிகளிலும் இரு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை விஜய் நேரில் அழைத்துப் பாராட்டுவார் என அறிவிக்கப்பட்டது.
மாணவர்களை அடையாளம் காணும் பணி முடிவடைந்து, அவர்களுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் 'தமிழக வெற்றிக் கழகம்' சார்பாக கடந்த வாரம் விஜய் பாராட்டினார். முதற்கட்டமாக 28-ம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருதுகளை இன்று வழங்குகிறார். இதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையே விஜய் வருகை தந்தார். கடந்த முறை அவர் அதிகாலையிலேயே வருகை தந்த நிலையில், இன்று ஊடகத்தினர் அதற்கு முன்னரே அவரது வீட்டுக்கு சென்றனர். இதனையடுத்து இன்னோவா காரில் விஜய் நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்துக்கு வந்தார்.
செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 19 மாவட்டங்களைச் சேர்ந்த 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள், பெற்றோரை பேருந்துகள் மூலம் த.வெ.க. நிர்வாகிகள் அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கி விஜய் கவுரவிக்க உள்ளார்.
இதனையடுத்து பாஸ் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அடுத்தடுத்து நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்துக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கடந்த +2 பொதுத்தேர்வில் ஒரே ஒரு திருநங்கை மாணவியாக தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவி நிவேதாவை விஜய் கௌரவித்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க இருக்கிறார். இதை அடுத்து அவர் காலையிலேயே நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்துக்கு வந்திருந்தார். அவருடன் திருநங்கை நலவாரிய உறுப்பினரான திருநங்கை அனு ஸ்ரீயும் வந்திருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அனைவருக்குமே அங்கீகாரம் என்பது மிக முக்கியம்.. அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் அவர்கள் முழு மனிதனாக உணர்கிறார்கள். அப்படி பார்க்கும்போது நடிகர் விஜய் அவர்கள் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இந்த நிகழ்வு தொடர்ந்து நிகழ வேண்டும் என்பது எங்களது ஆசை..இதை பார்க்கும் மாணவர்கள் தாங்களும் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
யார் இந்த நிவேதா?: பிளஸ்2 பொதுத் தேர்வை எழுதியவர்களில் 4,08,440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் அடங்குவர். அவர்களில் ஒரே ஒரு மூன்றாம் மாநில பாலினத்தவராக சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் லேடி வெலிங்டன் அரசு மாதிரி பள்ளியில் படித்த நிவேதான் எழுதினார். குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட அவர், பல்வேறு சிக்கல்கள், தடைகளை தாண்டி பிளஸ் 2 தேர்வு எழுதி 280 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications