சாதி அரசியலில் நடிகர் விஜய்? விஜயகாந்தை விட்டுவிட்டு திருமாவுக்கு வாழ்த்து ஏன்? தயாரிப்பாளர் கேள்வி
சென்னை: நடிகர் விஜய் சாதி அரசியலை முன்னெடுக்கிறார். நடிகர் விஜய் தன்னை திரைத்துறையில் வளர்த்துவிட்ட நடிகர் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறாமல் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதை குறிப்பிட்டு தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி வீடியோ வெளியிட்டு கடுமையாக சாடியுள்ளார்.
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றனர். மேலும் அதனை உறுதி செய்யும் வகையில் அவரது சில செயல்பாடுகளும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் தொகுதி வாரியா வாக்களார் விபரங்களை சேகரி்த்ததாக கூறப்படுகிறது.

அதோடு சமீபத்தில் தொகுதிக்கு 3 பேர் என 10, 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை சென்னை அழைத்து பாராட்டி உதவித்தொகை வழங்கினார். மேலும் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய டயலாக் என்பது அவரது அரசியல் பயணத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்தது.
அதாவது நடிகர் விஜய், ‛‛ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்கவிடாதீர்கள்'' என பேசினார். அவரது இந்த செயல்கள் என்பது நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு நுழையலாம் என்பதற்கு வலு சேர்த்து வருகிறது. மேலும் பெரியார், காமராஜர், அம்பேத்கரை படியுங்கள் என நடிகர் விஜய் தெரிவித்தார். இது அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் சாதி அரசியலை முன்னெடுக்கிறார் என திரைப்பட தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல்வாதிகள், திரையுலகத்தை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய், விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி வீடியோ வெளியிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் நடிகர் விஜயை நன்றி கெட்ட நபர் என விமர்சனம் செய்துள்ளதோடு, திருமாவளவனுக்கு பிறந்தநாள் கூறியதை சுட்டிக்காட்டி அவர் சாதி அரசியலை முன்னெடுக்க உள்ளதாக சாடியுள்ளார். இதுதொடர்பாக ஏஎம் சவுத்ரி வெளியிட்ட வீடியாவில் கூறப்பட்டுள்ளதாவது:
விஜயகாந்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர். விஜயகாந்த் அனைவருக்கும் பொதுவானர். அனைத்து தலைவர்களையும் மதிக்கக்கூடியவர். அம்பேத்கர், பெரியார் என அனைவரையும் மதிப்பார். ஆனால் நடிகர் விஜய் சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் 3 தலைவர்கள் பெயரை கூறிவிட்டு தேவர் பெயரை கூறாமல் விட்டுவிட்டார்.
இதுபற்றி நான் ஏற்கனவே நான் கூறியிருந்தேன். அந்த விழா முடிந்த பிறகு திருமாவளவன், விஜயை வாழ்த்தினார். விஜயும் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். நடிகர் விஜய் சாதி ரீதியாக அடையாளப்பட்டுள்ளார். அவர் சாதி அரசியலை நோக்கி பயணப்பட உள்ளார் என நினைக்கிறேன்.
ஏனென்றால் விஜயகாந்த் விஜயை மட்டுமின்றி சினிமாவில் நிறைய பேரை வாழ வைத்தவர். நடிகர் சூர்யாவை சினிமாவில் தூக்கிவிட்டவர். இத்தகை விஜயகாந்துக்கு இன்று வாழ்த்து சொல்லாத நடிகர் விஜயை நன்றி கெட்ட மனிதராக பார்க்கிறோம். அவர் சாதி அரசியலை முன்னெடுக்கிறார் என்பது தெரிந்து போய்விட்டது. மேலும் இன்றைய தினம் விஜயகாந்த் காலில் விழுந்து நடிகர் விஜய் ஆசீர்வாதம் வாங்கி இருக்க வேண்டும்.
மேலும் விஜயகாந்த் மகன் அரசியலில் வர கஷ்டப்படுகிறார். ஆனால் ஊருக்கே கைக்கொடுத்து தூக்கவிட்டவர் விஜயகாந்த். நடிகர் விஜயின் இந்த சாதிய அரசியலை மிக விரைவில் தோலுரிப்பேன். இந்த நன்றி கெட்ட செயலுக்கு நடிகர் விஜய் மிக விரைவில் பதில் கூறியே ஆகவேண்டும்'' என கடுமையாக சாடியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications