Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேதி ரெடி! 234 தொகுதிகளும் குறி! 10, +2 மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்!துவங்கும் அரசியல் பயணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என கூறப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தான் ஜூன் 3ம் தேதி 234 தொகுதிகளை சேர்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதும், அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் பல கட்சிகளில் செயல்பட்டு வருகின்றனர். இதுதவிர நடிகர் விஜயகாந்த் தேமுதிகவையும், சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியையும், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.

Actor Vijay may entered to politics, he Decided to meet 10th and +2 students on June 3 in Chennai

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என காலம்காலமாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என அறிவிப்பு செய்தார். இந்நிலையில் தான் நடிகர் ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் மீதான எதிர்பார்ப்பு தான் அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என தொடர்ந்து பேச்சுக்கள் உள்ளன. மேலும் அவரது சமீபத்திய நடவடிக்கைகளும் அரசியலை நோக்கியே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றது, விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை அரசியலுக்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Actor Vijay may entered to politics, he Decided to meet 10th and +2 students on June 3 in Chennai

இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள், அவர்கள் சார்ந்த கட்சிகள், அவர்கள் பெற்ற ஓட்டுகள் உள்ளிட்டவற்றை விஜய் மக்கள் இயக்கத்தினர் சேகரித்து வருவது விஜயின் அரசியல் அச்சாரமாக பார்க்கப்படுகிறது.மேலும் உலக பட்டினி தினமான இன்று ஏழை, எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் உணவு வழங்கினர்.

இதன் அடுத்தக்கட்டமாக தான் நடிகர் விஜய் 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை சந்திக்க திட்டடமிட்டுள்ளார். நடந்து முடிந்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் வெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை விஜய் சந்திக்கிறார். ஒரு தொகுதிக்கு 6 பேர் என மொத்தம் 234 தொகுதிகளை சேர்ந்த 1,444 மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்ட உள்ளார். மேலும் அவர்களுக்கு உதவிகள் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

Actor Vijay may entered to politics, he Decided to meet 10th and +2 students on June 3 in Chennai

இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளை சந்திக்க நடிகர் விஜய் தேதி குறித்துள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதாவது ஜூன் 3ம் தேதி சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் விஜய் மாணவ-மாணவிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது மாணவ-மாணவிகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டம், ரத்ததானம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ளனர். தற்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை, கல்வி உதவித்தொகை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் பட்சத்தில் மாணவ-மாணவிகளின் ஆதரவையும், அவர்களின் பெற்றோரின் சப்போர்ட்டையும் பெறலாம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+